உள்ளடக்கத்துக்குச் செல்

திருமயிலை தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமயிலை தொடருந்து நிலையம்


மைலாப்பூர்
சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்
திருமயிலை தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
ஆள்கூறுகள்13°02′06″N 80°16′02″E / 13.035047°N 80.267181°E / 13.035047; 80.267181
நடைமேடைபக்க நடைமேடை
நடைமேடை-1 → வேளச்சேரி **
நடைமேடை-2 → சென்னைக் கடற்கரை
** (எதிர்கால விரிவாக்கம் பரங்கிமலை)
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்Logo of Chennai Metro மஞ்சள் வழித்தடம்ஊதா வழித்தடம் திருமயிலை தொடருந்து நிலையம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்த்தப்பட்ட
வரலாறு
திறக்கப்பட்டது19 அக்டோபர் 1997
பயணிகள்
பயணிகள் 2009–103,235/நாள் (சராசரியாக)
சேவைகள்
முந்தைய நிலையம் சென்னை எம் ஆர் டி எஸ் அடுத்த நிலையம்
முண்டகக்கண்ணியம்மன் கோயில் வழித்தடம் 1 மந்தைவெளி
வழித்தடம் 1
(எதிர்காலச் சேவை)
மந்தைவெளி
அமைவிடம்
Map


திருமயிலை தொடருந்து நிலையம் (Thirumayilai railway station) அல்லது மைலாப்பூர் தொடருந்து நிலையம் என்பது சென்னை பறக்கும் தொடருந்து திட்ட வழித்தடத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது 1997ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது சென்னை பறக்கும் தொடருந்து திட்டத்தின் முதல் கட்டத்தில் நிறைவு செய்யப்பட்டது.[1] இந்த நிலையம் பக்கிங்காம் கால்வாயின் கரையில் அமைந்துள்ளது. லசு முனையத்திற்கு அருகிலுள்ள இராமகிருஷ்ணா மடத்துச் சாலையிலிருந்து இந்நிலையத்தினை அணுகலாம். ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர். வி. என். எல்) அலுவலகம் மற்றும் தெற்கு ரயில்வேயின் கணினிமயமாக்கப்பட்ட பயணச்சீட்டு முன்பதிவு மையம் ஆகியவையும் இந்த நிலைய கட்டிடத்தில் உள்ளன.[2] நிலைய கட்டிடம் இதன் அடித்தளத்தில் 1050 சதுர மீட்டர் வாகன நிறுத்துமிடத்துடன் உள்ளது.[3] இந்த நிலையம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 13.540 மீட்டர் தொலைவில் உள்ளது.

நிலைய அமைப்பு

[தொகு]
திருமயிலை வழித்தட அமைப்பு
P2
P1
இருபக்க ஓடுபாதை நடைமேடையுடன் கூடிய நிலையம்
ஜி. தெரு மட்டம் வெளியேறு/நுழைவு
எல்1 இடைமாடி கட்டணக் கட்டுப்பாடு, நிலைய பயணச்சீட்டு மாடம், தானியங்கி பயணச்சீட்டு விற்பனை இயந்திரங்கள்
எல்2 பக்க நடைமேடை | இடதுபுறத்தில் கதவுகள் திறக்கும்ஊனமுற்றவர் அணுகல்
நடைமேடை 2
வடக்கு நோக்கி
சென்னைக் கடற்கரை நோக்கி அடுத்த நிலையம்-முண்டகக்கண்ணியம்மன் கோயில்
நடைமேடை 1
தெற்கு நோக்கி
வேளச்சேரி நோக்கிஅடுத்த நிலையம்-மந்தைவெளி (எதிர்காலத்தில் பரங்கிமலை நிலையத்திற்கு மேலும் நீட்டிக்கப்படும்)
பக்க மேடை | இடதுபுறத்தில் கதவுகள் திறக்கும்ஊனமுற்றவர் அணுகல்
எல்2

வளர்ச்சி

[தொகு]

செப்டம்பர் 2013இல், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ. ஆர். சி. டி. சி) திருவன்மியூர், வேளச்சேரி ஆகிய இரண்டு நிலையங்களுடன் இந்த நிலையத்தில் உணவு வளாகத்தை அமைப்பதற்கான விலைப்புள்ளிகளை கோரியது.[4]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ajai Sreevatsan (31 October 2011). "EVOLUTION OF CHENNAI'S PUBLIC TRANSPORT SYSTEM". The Hindu. http://www.thehindu.com/multimedia/archive/00824/Evolution_of_Chenna_824269a.pdf. பார்த்த நாள்: 18 August 2012. 
  2. Shashank Venugopal (4 June 2011). "Mylapore MRTS station dirty". Mylapore Times. http://www.mylaporetimes.com/2011/06/mylapore-mrts-station-dirty/. பார்த்த நாள்: 18 August 2012. 
  3. R.Ramanathan. "Presentation on MRTS & Rail facilities in and around Chennai" (PDF). Traffic Transportation and Parking – Session 2. CMDA, Chennai. Retrieved 19 August 2012.
  4. Narayanan, Vivek (28 September 2013). "Missed a meal? Grab a bite at MRTS station in Chennai". The Hindu (Chennai). http://www.one.in/hindu-chennai/missed-a-meal-grab-a-bite-at-mrts-station-in-chennai-508634.html. பார்த்த நாள்: 18 Apr 2014.