உள்ளடக்கத்துக்குச் செல்

திருமண ஒளிப்படக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமணப் புகைப்படம் (Wedding photography) எடுத்தல் என்பது, புகைப்படக் கலையில் ஒரு சிறப்புத் துறையாகும், இது பிரதானமாக திருமணங்கள் தொடர்பான நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை புகைப்படம் எடுப்பதில் கவனம் செலுத்துகிறது. திருமணத்திற்கு முந்தைய நிச்சயதார்த்த அமர்வு போன்ற அதிகாரப்பூர்வ திருமண நாளுக்கு முன் தம்பதியினரின் பிற வகையான உருவப்படப் புகைப்படங்களும் இதில் அடங்கும், இந்த புகைப்படங்கள் பின்னர் தம்பதியினரின் திருமண அழைப்பிதழ்களுக்கும், பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் போன்ற வெளிப்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும். திருமண நாளில், புகைப்படக் கலைஞர்கள் நாள் முழுவதும் பல்வேறு திருமண நிகழ்வுகள் மற்றும் சடங்குகளை ஆவணப்படுத்த உருவப்பட புகைப்படம் மற்றும் ஆவணப்பட புகைப்படத்தைக் கைப்பற்றுவார்கள்.[1]

திருமண புகைப்படம் எடுத்தலில், படச்சுருள் காலத்திலிருந்தே கணிசமாக சில துணைப் பிரிவுகள் உருவாகியுள்ளது, திருமண புகைப்பட பாணியை வரையறுக்க வேண்டிய அவசியம் என்பது கடந்த இருபது ஆண்டுகளில் இந்தத் துறை எவ்வளவு தூரம் நகர்ந்துள்ளது என்பதைப் பறைசாற்றுகிறது. பாரம்பரிய திருமண புகைப்படம் எடுத்தலில் தம்பதியர், அவர்களது குடும்பங்கள் மற்றும் திருமண விருந்தினரின் தோன்றெழில் மற்றும் முறையான உருவப்படங்களில் கவனம் செலுத்துகிறது. முதல் முத்தம், இனிப்பப்பம் வெட்டுதல் மற்றும் முதல் நடனம் போன்ற பாரம்பரிய தருணங்களைப் படம்பிடிக்க புகைப்படக் கலைஞர் குழுவிற்கு குறிப்பிட்ட தோரணைகள் மற்றும் நிலைகளுக்கு வழிகாட்டுவார். மேலும் ஒரு கதையைச் சொல்ல அல்லது உணர்ச்சியைப் படம்பிடிக்க முயற்சிப்பதை விட, நிகழ்வுகளின் வரலாற்றுப் பதிவை உருவாக்குவதே இதன் பிரதான குறிக்கோளாக கொண்டுள்ளது.[2]

வரலாறு

[தொகு]
ஒரு தேவாலயத்தின் முன் நிற்கும் புதுமணத் தம்பதியினரும் அவர்களது திருமண புகைப்படக் கலைஞரும், வெஸ்ட்மவுண்ட், மொண்ட்ரியால், 1945

திருமண புகைப்படக் கலையின் வரலாறு 1840களின் முற்பகுதியில் தொடங்குகிறது. இந்தக் காலகட்டத்தில், புகைப்படம் எடுத்தல் என்பது வணிக ரீதியாக மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டது, ஆனால் திருமண நாளின் நினைவுகளை உருவாக்கும் யோசனையானது, ஏற்கனவே பிறந்திருந்தது. முக்கியமாக உபகரணங்களின் வரம்புகள் காரணமாக, திருமண புகைப்படம் எடுத்தல் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக படப்பிடிப்புக் கூடத்தின் புகைப்படக் கலையாகவே இருந்தது. 1800களில் காகித புகைப்படங்கள் இல்லை புகைப்படத் தொகுப்புகள் இல்லை. ஒரு சிறிய செப்புத் தாளில் ஒரு டகேர் ஒளிப்பட முறையின் உருவப்படம் மட்டுமே இருந்தது. ஆண்டுகள் செல்லச் செல்ல, தொழில்நுட்பங்களின் வளர்ச்சியின் அடிப்படையில் புகைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட விதத்தை மாற்றியது.

புகைப்படக் காகிதத்திற்கு முன்பு, புகைப்படக் கலைஞர்கள் கண்ணாடித் தகடுகள், தகரத் தாள்கள் மற்றும் செப்புத் தாள்களைப் பயன்படுத்தினர். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வண்ணப் புகைப்படங்களைத் தயாரிப்பது சாத்தியமானது, ஆனால் இந்த செயல்முறை (1950கள் வரை) தொழில்முறை புகைப்படம் எடுப்பதற்கு மிகவும் நம்பமுடியாததாக இருந்தது. குறுகிய காலத்திற்குப் பிறகு நிறங்கள் மாறி மங்கின, எனவே புகைப்படக் கலைஞர்கள் கருப்பு மற்றும் வெள்ளை படத்துடன் தொடர்ந்து பணியாற்றினர். தொழில்நுட்பம் புகைப்பட படச்சுருளை தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் புதிய பொருட்களையும் அதைச் செயலாக்க சிறந்த வேதியியலையும் கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்தாலும், திருமண புகைப்பட நுட்பங்கள் இரண்டாம் உலகப் போரின் இறுதி வரை அப்படியே இருந்தன.[3]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமண_ஒளிப்படக்கலை&oldid=4218122" இலிருந்து மீள்விக்கப்பட்டது