திருமணம் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமணம்
வேறு பெயர்கல்யாணம்
வகைகாதல்
குடும்ப
[[நாடகத் தொடர்]]
இயக்கம்
 • மித்ரன் ஜவஹர் (1-76)
 • அழகர் பெருமாள் (77-479)
நடிப்பு
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
பருவங்கள்1
அத்தியாயங்கள்47
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஒளிப்பதிவுபாலசுப்ரமணியம்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்மாஸ்டர் சேனல்
ஒளிபரப்பு
அலைவரிசைகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்8 செப்டம்பர் 2018 (2018-09-08) –
16 அக்டோபர் 2020 (2020-10-16)

திருமணம் என்பது 8 அக்டோபர் 2018 முதல் 16 அக்டோபர் 2020 ஆம் ஆண்டு வரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான காதல் மற்றும் குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.

இந்த தொடர் கன்னட மொழியில் புகழ் பெற்ற 'அக்னிசாட்சி' என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும். புதுமுக நடிகர் சித்து என்பவர் சந்தோஷாகவும் இவருக்கு ஜோடியாக நந்தினி தொடர் புகழ் 'ஷ்ரேயா அஞ்சன்' என்பவர் ஜனனியாகவும் நடித்துள்ளார்கள்.[1]

இந்த தொடரை அத்தியாயம் 1 முதல் 76 வரை பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் 'மித்ரன் ஜவஹர்' என்பவர் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் 'பாலசுப்ரமணியம்' ஒளிப்பதிவு செய்கின்றார், இவர் தேவர் மகன், திருடா திருடா போன்ற 50 மேட்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[2]

கதைச்சுருக்கம்[தொகு]

சந்தோஷ் வேறு ஒரு பெண்ணைக் காதலித்து, குடும்பத்தினரின் நிர்ப்பந்தத்தின் பெயரில் ஜனனியை திருமணம் செய்கின்றான். இத்திருமணத்தை விரும்பாத சந்தோஷ் ஜனையிடம் விவாகரத்து செய்ய கையெழுத்து வாங்குகிறான். விவாகரத்திற்குப் பிறகு ஜனனி மற்றும் சந்தோஷ் இடையே அன்பும், வெறுப்பும் கலந்த ஓர் உறவு நீள்கிறது. அந்த உறவில் காதலும் துளிர்க்கிறதா என்பதுதான் கதை.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

சந்தோஷ் குடும்பத்தினர்[தொகு]

 • இந்துமதி - மாயா (அண்ணி)
 • சிவலிங்கம் பானு - சீனிவாசன் (அப்பா)
 • தீபக் - நவீன் (சகோதரன்)
 • டினா - ஆர்த்தி (மாயாவின் சகோதரி)
 • பீட்டோ - கெளதம் (சந்தோஷ் நண்பன்)
 • ரெய்சா ரெய் - சுவேதா (சகோதரி)

ஜனனி குடும்பத்தினர்[தொகு]

 • மனோஜ் குமார் - லக்ஷ்மணன் (அப்பா)
 • கிருவா - சுமதி (அம்மா)
 • பிரீத்தி (2018-2020) → வித்தியா சந்திரன் (2020) - அனிதா (சகோதரிகள்)
 • ஹரி கிருஷ்ணா - வினோத் (சகோதரன்)
 • ரேகா - வாணி (வினோத் மனைவி)
 • மைத்ரேயன் - ஆனந்த் (உறவினர்)

துணை கதாபாத்திரம்[தொகு]

 • ஷெரின் ஜானு - சக்தி (சந்தோஷின் முன்னாள் காதலி)
 • பாலசுப்ரமணியம்
 • அட்லின்
 • தீபா
 • சுவேதா
 • அர்ச்சனா

சிறப்பு தோற்றம்[தொகு]

சாதனை[தொகு]

இந்த தொடர் சில மணிநேரம் தேசிய அளவிலான டுவிட்டர் ட்ரெண்ட்டிங்கில் திருமணம் ஹேஷ் டாக் (#திருமணம்) முதல் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

ஆண்டு விருது பரிந்துரை நடிகர்கள் முடிவு
2019 கலாட்டா நட்சத்திரா தொலைக்காட்சி விருதுகள் சிறந்த நடிகர் சித்து பரிந்துரை
சிறந்த நடிகை ஷ்ரேயா அஞ்சன் பரிந்துரை
சிறந்த ஜோடி சித்து & ஷ்ரேயா அஞ்சன் வெற்றி
சிறந்த எதிர்மறை கதாபாத்திரம் பெண் இந்துமதி பரிந்துரை

ஆதாரங்கள்[தொகு]

 1. "`திருமணம்'... கலர்ஸ் தமிழின் ஸ்டார் சீரியல்!". www.vikatan.com. பார்க்கப்பட்ட நாள் 2018-09-10.
 2. "சினிமா பிரபல்யங்கள் மேற்பார்வையில் திருமணம் தொடர்". cinema.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2018-09-01.
 3. "'Shreya Anchan' will now be seen in Tamil serial 'Thirumanam'" (in ஆங்கிலம்). www.daijiworld.com. பார்க்கப்பட்ட நாள் 2018-09-20.
 4. "சூரியுடன் களமிறங்கும் 'திருமணம்' சீரியல்... 'கலர்ஸ் தமிழ்' சர்ப்ரைஸ்!". www.vikatan.com. பார்க்கப்பட்ட நாள் 2018-09-29.

வெளி இணைப்புகள்[தொகு]

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 10 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி திருமணம்
(8 செப்டம்பர் 2018 - 16 அக்டோபர் 2020)
அடுத்த நிகழ்ச்சி
- மாங்கல்ய தோஷம்