திருமணம் பற்றிய பெரியார் ஈ.வெ.இரா வின் கருத்துக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரியார் ஈ.வெ.இரா திருமணம் குறித்து சமகாலத்து முறைகளுக்கு மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தார். சமூக நீதிக்காகவும் பெண் விடுதலைக்காகவும் பாடுபட்டவர். தமிழ்நாட்டில் சுயமரியாதை திருமணத்தை அறிமுகப்படுத்தியவர்.

பகுத்தறிவுத் திருமணம்[தொகு]

இன்ன அவசியத்திற்கு, இன்ன காரியம் செய்கிறோம் என்று அறிந்து கொள்ளாமலும், அறிய முடியாமலும் இருக்கும்படியான காரியங்களைச் (சடங்குகளை) செய்யாமல் நடத்தும் திருமணம் பகுத்தறிவுத் திருமணம் ஆகும்.

சுதந்திரத் திருமணம்[தொகு]

சுதந்திரத் திருமணம் என்பது மணமக்கள் தாங்களாகவே ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்து திருப்தி அடைந்து காதலித்து நடத்தும் திருமணம் ஆகும்.

புரட்சித் திருமணம்[தொகு]

புரட்சித் திருமணம் என்பது தாலி கட்டாமல் செய்யும் திருமணம் ஆகும்.

சிக்கனத் திருமணம்[தொகு]

சிக்கனத் திருமணம் என்பது ஆடம்பர காரியங்கள் தவிர்க்கப்பட்டு சுருங்கின செலவில், குறுகிய நேரத்தில் நடத்துவது ஆகும்.

சுயமரியாதைத் திருமணம்[தொகு]

சுயமரியாதைத் திருமணம் என்பது பார்ப்பனரைப் புரோகிதராக வைத்து நடத்தாத திருமணம் ஆகும்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி (2002). பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி. 55: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். பக். 89. 
  2. பெரியார் ஈ.வெ.இரா (மார்ச் 1950). [www.viduthalai.in "சித்திர புத்திரன்"]. விடுதலை நாளிதழ் (14.3.1950). doi:14.3.1950. www.viduthalai.in.