திருமணம் பற்றிய புத்த மத கருத்துகள்
பௌத்த மதம், திருமணம் (Buddhist view of marriage) என்பதை ஒரு மதச்சார்பற்ற விடயமாகக் கருதுகிறது.[1] தங்கள் அரசுகளால் நிர்ணயிக்கப்பட்ட திருமணம் தொடர்பான குடியியல் சட்டங்களை பௌத்தர்கள் பின்பற்ற வேண்டுமென பௌத்த மதத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.[2] பொதுவாகத் திருமணம் முடிந்தபிறகு பௌத்தர்கள், பௌத்தத் துறவிகளிடம் ஆசிர்வாதம் பெறுகின்றனர்.[2]
வரலாறு
[தொகு]கௌதம புத்தர், திருமணத்திற்கு எதிராக எதுவும் கூறவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக திருமணத்தின் சில சிரமங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். இதை தனது பராபவா சுத்தாவில் கூறியுள்ளார். ஒருவனுடைய வீழ்ச்சிக்குக் காரணம், அவன் மனைவியோடு இருப்பதல்ல; அவன் வேசியோடும் பல மனைவிகளோடும் இருப்பதும் இன்னொருவரின் மனைவியைத் தவறான எண்ணத்தோடு பார்த்தலும் தான் என்கிறார்.
பார்வை
[தொகு]புத்தர் மற்றும் அவரது சீடர்களின் சொற்பொழிவுகள் மற்றும் போதனைகளில் ஓரினச்சேர்க்கை கண்டனம் செய்யப்படவில்லை. திபெத் தலாய் லாமாவின் திபெத்திய பௌத்தம் உட்பட்ட அனைத்துப் பௌத்த பிரிவுகளிலும் கருணையும் அன்பும் வலியுறுத்தப்படுகிறது.
தலாய்லாமா திருமணம் பற்றிக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
மேற்குலகில் பலர் திருமணம் செய்து கொள்வதை விட்டுவிட்டனர்; அதனை இன்னொரு மனிதனைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக் கருதுவதில்லை. திருமணத்தை எளிதில் பெறக்கூடிய, எளிதில் கைவிடக்கூடிய நவீன திருமணங்களை, சுதந்திரமான ஆனால் குறைவான மனநிறைவு கொண்டதாகக் கொள்ளலாம்.[3]
பவுத்த மதம் திருமணத்தை ஊக்கப்படுத்தவோ, தடுக்கவோ இல்லை; ஆனால் சில வழிகாட்டுதல்களை அளிக்கிறது. பவுத்த அடிப்படைச் சட்டமான பன்காசிலா பாலியல் தவறான நடத்தையைக் கண்டிக்கிறது.[4][5] மேலும் திக்கா நிகாயா நூலில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை ஆதரிக்கிறது.[6]
விவாகரத்து
[தொகு]புத்த மதத்தில் திருமணம் மதம் சார்ந்தது அல்ல. எனவே விவாகரத்தும் தடை செய்யப்படவில்லை. தம்மானந்தர் என்பவர், உண்மையாகவே கணவன் மனைவி சேர்ந்து வாழ முடியாது; அவ்வாறு வாழ்வது பொறாமைக்கும் வெறுப்புக்கும் வழிவகுக்குமெனில் அவர்கள் தனியாகப் பிரிந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்கிறார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Personal Ceremonies: Marriage / Funeral Rites". Buddhanet.net. Retrieved 2012-06-06.
- ↑ 2.0 2.1 "A Basic Buddhism Guide: Buddhist Ethics". Buddhanet.net. Retrieved 2012-06-06.
- ↑ "HH Dalai Lama". Khandro.net. Retrieved 2012-06-06.
- ↑ "Buddhist view on marriage". Purifymind.com. Retrieved 2012-06-06.
- ↑ "Buddhist practices". Londonbuddhistvihara.org. Archived from the original on 2019-10-27. Retrieved 2012-06-06.
- ↑ "Sigalovada Sutta". Accesstoinsight.org. 2012-03-24. Retrieved 2012-06-06.
- ↑ "A Happy Married Life: A Buddhist Perspective". Accesstoinsight.org. Retrieved 2012-06-06.
வெளி இணைப்புகள்
[தொகு]- Marriage articles at the Access to Insight site
- Weddings and Theravada Buddhism பரணிடப்பட்டது 2006-05-27 at the வந்தவழி இயந்திரம்
- A Zen Buddhist perspective on same-sex marriage பரணிடப்பட்டது 2008-11-08 at the வந்தவழி இயந்திரம்
- Lengthy review of Buddhist views on married life in relation to the western world.