உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்ரயார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருப்ரயார் இராமசாமி கோயில்
தீவ்ரா ஆற்றின் கரையிலிருந்து காணப்படும் கோயில் நுழைவாயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:திருச்சூர் மாவட்டம்
அமைவு:திருப்ரயார்
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரளம்

திருப்ரயார் இராமசாமி கோயில் (Thriprayar Shree Ramaswami Temple) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் திருப்ராயாரில் அமைந்துள்ள இந்து கோவிலாகும். இக்கோயிலில் விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான இராமர், நான்கு கைகளுடன் கைகளில் சங்கு, சக்ராயுதம், வில் மற்றும் பூச்சரத்தைத் தாங்கி நிற்கின்றார். இந்த கோயில் தீவ்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தெய்வம் ஆரட்டுப்புழா பூரத்தின் முதன்மை தெய்வமாவார். இங்குள்ள சிலையை விஷ்ணுவின் மற்றொரு அவதாரமான கிருஷ்ணர் வணங்கினார் என்று நம்பப்படுகிறது. இங்கு இராமருடன், சிவன், தட்சிணாமூர்த்தி, விநாயகர், சாஸ்தா, கிருஷ்ணர் போன்ற தெய்வங்களுக்கும் சிற்றாலயங்கள் உள்ளன. நாலம்பலம் என்று பிரபலமாக அழைக்கபடும் தசரதனின் நான்கு மகன்களுக்காக கேரளத்தில் அமைக்கபட்டுள்ள நான்கு கோயில்களில் இது முதன்மையானதாகும். இந்த நாலம்பலத்தில் இடம்பெற்ற பிற கோயில்களாக இரிஞ்ஞாலகுடாவில் பரதனுக்காக அமைக்கபட்டுள்ள கூடல்மாணிக்கம் கோயில், திருமூழிக்களத்தில் இலட்சுமணனுக்கு அமைக்கபட்டுள்ள கோயில், சத்ருக்ன்னுக்கு அமைக்கபட்டுள்ள சத்துருக்கனன் கோயில் போன்றவை உள்ளன. மலையாள மாதமான கர்கடகம் மாதத்தில் ஒரே நாளில் இந்த நான்கு கோயில்களை வழிபடுவது மிகவும் புனிதமானது என்று நம்பப்படுகிறது. இதனால் பல பக்தர்கள் இந்த கோயில்களுக்கு வருகை தருகின்றனர். திருபிராயர் கோயில் கொச்சின் தேவஸ்வம் வாரியத்திடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு 3 பிரபலமான நம்பூதிரி குடும்பங்களான செல்லூர் மனா, ஜனப்பள்ளி மனா மற்றும் புன்னப்பிள்ளி மனா ஆகியவற்றால் நிர்வகிக்கபட்டு வந்தது. இன்னும், இந்த மூன்று குடும்பங்களின் தலைவர்களும் கோயிலின் ஓரலன்களாக பணியாற்றுகிறார்கள் மேலும் பழக்கவழக்கங்களின்படி சடங்குகள் மற்றும் திருவிழாக்களில் பங்கேற்கிறார்கள்.[1][2]

மேலும் காண்க

[தொகு]


குறிப்புகள்

[தொகு]
  1. "Triprayar Sree Rama Swami Temple". Vaikhari.com. பார்க்கப்பட்ட நாள் 2013-10-02.
  2. "SREE RAMA TEMPLE". ThrissurKerala.com. பார்க்கப்பட்ட நாள் 2013-10-02.
படவரிசை
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்ரயார்_கோயில்&oldid=3869841" இலிருந்து மீள்விக்கப்பட்டது