திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
தோற்றம்
திருப்பூர் மாவட்டம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் ஒரு மாவட்டம் ஆகும். இதில் மொத்தம் 13 ஊராட்சி ஒன்றியங்கள் (வருவாய் வட்டங்கள்) உள்ளன.[1] இது அக்டோபர் 2008 இல் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாவட்டம். இம்மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் திருப்பூர் [2], அவினாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை ஆகிய வட்டங்களையும், ஈரோடு மாவட்டத்தின் தாராபுரம், காங்கேயம் ஆகிய வட்டங்களையும் கொண்டு உருவாக்கப்பட்டது[3]. திருப்பூர் நகரம் இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாகும்
ஊராட்சி ஒன்றியங்கள்
[தொகு]இம்மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[4] இந்த 13 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 265 ஊராட்சிகள் உள்ளன.[5]
- திருப்பூர் ஒன்றியம்
- அவினாசி ஒன்றியம்
- பல்லடம் ஒன்றியம்
- உடுமலைப்பேட்டை ஒன்றியம்
- தாராபுரம் ஒன்றியம்
- காங்கேயம் ஒன்றியம்
- மடத்துக்குளம் ஒன்றியம்
- குடிமங்கலம் ஒன்றியம்
- ஊத்துக்குளி ஒன்றியம்
- குண்டடம் ஒன்றியம்
- வெள்ளக்கோயில் ஒன்றியம்
- மூலனூர் ஒன்றியம்
- பொங்கலூர் ஒன்றியம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ திருப்பூர் மாவட்ட அதிகாரபூர்வ இணையதளம்
- ↑ திருப்பூர் மாவட்ட சிறப்பு தினமலர்
- ↑ "New Tirupur district formed". Archived from the original on 2008-10-29. Retrieved 2017-07-10.
- ↑ திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- ↑ "Village Panchayats | Tiruppur District, Government of Tamil Nadu | Textile City | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-07-27.