உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்புலிவனம் ஏரி

ஆள்கூறுகள்: 12°49′N 79°53′E / 12.81°N 79.88°E / 12.81; 79.88
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருப்புலிவனம் ஏரி
அமைவிடம்திருப்புலிவனம், காஞ்சிபுரம் மாவட்டம், தென்னிந்தியா
ஆள்கூறுகள்12°49′N 79°53′E / 12.81°N 79.88°E / 12.81; 79.88
வகைகுளம்
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு120 எக்டேர்
சராசரி ஆழம்3.5 மீட்டர் (11.48 அடி)

திருப்புலிவனம் ஏரி (Thirupulivanam Lake) இது, தமிழ்நாட்டின் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புலிவனம் கிராமத்தில் பல்லவர்களால் 120 எக்டேர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட ஒரு ஏரி ஆகும்.[1]

அமைவிடம்

[தொகு]

காஞ்சிபுரம் மாவட்டத்தின் உத்திரமேரூரில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பல்லவ மன்னன் நந்திவர்மனால் கட்டப்பட்ட சுமார் 1000 ஆண்டுகள் பழமையான திருப்புலிவனம் வியாக்ரபுரீசுவரர் கோயில் அருகில் அமைந்துள்ள இது,[2][3] பொதுவாக திருப்புலிவனம் ஏரி என்று அழைக்கப்படுகிறது. அட்சரேகை: 12° 39'48.1” N; 12° 39'45.5” N; 12° 39'29.6” N; 12° 39'20.6” N மற்றும் தீர்க்கரேகை: 079° 45’29.6” E; 079° 45’36.4” E; 079° 45’33.3” E; 079° 45’30.6” E புவியியல் ஆயத்தொலைவுகள் கொண்ட இது, ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி அல்ல. மேலும் இந்த ஈரநிலம், பொதுப்பணித்துறையின் சென்னை மண்டலத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. மேலும் இந்த நீர்த்தடத்தை சுற்றியுள்ள கிராமங்கள் திருப்புலிவனம், முருகேரி, ஆண்டித்தாங்கல் மற்றும் ஆலப்புலம் ஆகியவை ஆகும்.[1]

பரப்பளவு

[தொகு]

இந்த ஈரநிலத்தின் பரப்பளவு, புவியிடங்காட்டியின் ஆயத்தொலைவுகளின் அடிப்படையில், ஈரநிலத்தின் பரப்பளவு 116 எக்டேர் என மதிப்பிடபட்டதாக கறுப்படுகிறது.மேலும் இந்த ஈரநிலம், 'குளம்' என்ற துணைப்பிரிவில் உள்ள மனிதனால் உருவாக்கப்பட்ட (உள்நாட்டு) வகையைச் சேர்ந்தது என வரையறுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களுக்கு இந்த ஏரியின் தோற்றம் பற்றித் தெரியவில்லை, ஆனால் இலக்கியங்கள் இந்த ஈரநிலத்தை மனிதனால் உருவாக்கப்பட்ட குளம் என்று குறிப்பிடுகின்றன. இரண்டாம் நிலைத் தகவல்களின் அடிப்படையில், இந்த ஈரநிலத்தின் சராசரி ஆழம் 3.5 மீட்டராகவும், இது கடல் மட்டத்திலிருந்து 67 முதல் 71 மீட்டர் வரை உயரம் கொண்டது எனவும் கூறப்படுகிறது.[1]

நீர் நிலவரங்கள்

[தொகு]
  • இந்த ஈரநிலத்திற்கான முக்கிய நீர் ஆதாரம் மழைப்பொழிவு, நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து வரும் சுற்றியுள்ள வழிந்தோடும் நீர் மற்றும் செய்யாறு ஆற்றிலிருந்து வரும் நேரடி நீர்வரத்து ஆகும்.
  • இந்த ஏரியில் உள்ள நீர் பெரும்பாலும் இடைப்பட்ட தன்மையுடையதாகவும், ஏரியில் இருந்து வரும் நீர், சுற்றியுள்ள வேளாண் நிலங்களுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளதாகவும் மற்றும் இந்த நீர் அப்பகுயின் நிலத்தடி நீரை உயர்த்த உதவுகிறது என கூறப்படுகிறது.
  • ஏரியின் நீர் அமிலக் காரத்தன்மை கொண்டதாகக் காணப்படுவதாகவும் அது 8.0 வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. மாதிரி எடுக்கப்பட்ட நேரத்தில், ஏரியில் உள்ள நீர் நன்னீராக இருந்ததாகவும், அதன் உப்புத்தன்மை 0.174 பிபிடி எனப் பதிவு செய்யப்பட்டது. (0.174 ppt என்றால் ஒரு லிட்டர் (அல்லது கிலோகிராம்) தண்ணீரில் 0.174 கிராம் உப்பு மட்டுமே உள்ளது, இது மிகக் குறைந்த அளவு.)
  • இந்த ஏரியில் மிதக்கும், நீரில் மூழ்கிய மற்றும் நீரில் இருந்து வெளிவரும் தாவரங்கள் மிகக் குறைவாகக் காணப்படுவதால், இது நடுத்தர ஊட்டச்சத்து" அல்லது "மிதமான வளமுடைய நிலைக்கு நெருக்கமாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த ஏரியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வரும் வீட்டுக் கழிவுநீரையும், அருகிலுள்ள கிடங்குகளிலிருந்து வரும் சிறிய அளவிலான தொழிற்சாலைக் கழிவுகளையும் பெறுகிறது என அறியப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Criteria for wetland prioritization and frame work for wetland monitoring in the state of Tamil Nadu - Thirupulivanam Lake - Page: 281" (PDF). tnswa.tn.gov.in (ஆங்கிலம்). 2022. Retrieved 2025-12-22.
  2. dinamalar.com
  3. Sri Vyagapureeswarar Temple - Thirupulivanam
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்புலிவனம்_ஏரி&oldid=4427918" இலிருந்து மீள்விக்கப்பட்டது