திருப்புறம்பியம் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருப்புறம்பியம் போர் (Battle of Sri Purambiyam), கொள்ளிடத்தின் கரையில் உள்ள திருப்புறம்பியம் என்ற இடத்தில் பல்லவன் அபராசிதவர்மனுக்கும், பாண்டியன் இரண்டாம் வரகுணனுக்கும் கி.பி.885இல் நடந்தது. இதில் ஆதித்த சோழன், கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதி ஆகியோர் பல்லவருடன் சேர்ந்து பாண்டியனை எதிர்த்தனர். பாண்டியன் தோற்றான். கங்க மன்னன் பிருதிவிபதி இறந்தான். அபராசிதவர்ம பல்லவன் வென்றான். எனினும் ஆதித்த சோழனுக்கே பெரும்பயன் கிடைத்தது. சோழநாடு முழுவதையும் அவன் மீட்டுக் கொண்டான்[1]. போர் நடைபெற்ற பகுதியை இன்றும் மக்கள் நினைவுகூர்கின்றனர். "உதிரம் வடிந்த தோப்பு" என்பது இன்று குதிரைத் தோப்பாக நிற்கின்றது[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "5.1 பின்புலங்கள் (தமிழ் இணையக் கல்விக்கழகம்)". 16 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. முனைவர் மு. இளங்கோவன் (26 சூலை, 2010). "தமிழ் இணைய ஆர்வலர் ஆலவாய் அ.சொக்கலிங்கம் (ஒன்இந்தியா.கொம்)". http://tamil.oneindia.com/art-culture/essays/2010/26-tamil-language-internet-aalavai-chokkalingam.html. பார்த்த நாள்: 16 சூலை 2015.