திருப்பாலை
தோற்றம்
திருப்பாலை | |
|---|---|
| நாடு | இந்தியா |
| மாநிலம் | தமிழ் நாடு |
| மாவட்டம் | மதுரை |
| உள்ளாட்சி அமைப்பு | மதுரை மாநகராட்சி |
| அரசு | |
| • வகை | மாநகராட்சி |
| • மாநகரட்சித் தலைவர் | இந்திராணி பொன் வசந்த |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் |
| அஞ்சல் குறியீடு | 625014 |
திருப்பாலை என்பது இந்தியா, தமிழ்நாடு, மதுரையின் வடக்கே உள்ள (கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட) ஒரு உட்கடைக் கிராமமாகும்; மதுரை (வடக்கு தாலுகா) வட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கிராமமாகும்.[1] 2011-இல் இதன் கிராமப் பஞ்சாயத்து கலைக்கப்பட்டு மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இங்கு முக்கியத் தொழிலாக விவசாயம் உள்ளது. சமயநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தது மற்றும் மதுரை மக்களவைத் தொகுதியைச் சேர்ந்ததாகும். ஆன்மிக பேச்சாளர் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் கிருபாகரம் இப்பகுதியில் அமைந்துள்ளது.
கல்வி நிலையங்கள்
[தொகு]மதுரைப் புறநகர்பகுதியாகவும், மதுரைக்கு மிக அருகிலும் இந்த ஊர் இருப்பதால் இங்கு பல கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன.
- யாதவர் கல்லூரி
- இ. எம். ஜி. யாதவர் மகளிர் கல்லூரி
- வேதிக் மெட்ரிக்குலேஷன் பள்ளி
- ஜெயின் வித்யாலய பள்ளி[2] முதலியவை இங்குள்ள சில முக்கியக் கல்வி நிறுவனங்கள் ஆகும்.
அருகேவுள்ள வழிபாட்டுத் தலங்கள்
[தொகு]- திருப்பாலை கிருஷ்ணன் கோவில்
- மந்தையம்மன் கோவில்
- நொண்டிச்சாமி கோவில்
- திருவேங்கடமுடையன் திருக்கோயில்
- இஸ்கான் கிருஷ்ணன் கோவில்
- திருப்பாலை ஜூம்மா மசூதி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மதுரை வடக்கு தாலுக்கா". Archived from the original on 2012-02-09. Retrieved 2012-01-21.
- ↑ http://www.jainvidyalaya.in/ ஜெயின் வித்யாலயா பள்ளியின் இணையதளம்