திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை (1869 – 1938) தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞராவார்.

பிறப்பும், இசைப் பயிற்சியும்[தொகு]

1869 ஆம் ஆண்டு டிசம்பர் 15 அன்று பிறந்த நடராஜசுந்தரம் பிள்ளையின் பெற்றோர்: சுவாமிநாத பிள்ளை – பரிபூரணத்தம்பாள். நடராஜசுந்தரமும் அவரது தம்பி சிவசுப்பிரமணியமும் இஞ்சிக்குடி குமரப்பிள்ளையிடம் நாதசுவரம் கற்றனர். அதன்பிறகு சகோதரர்கள் இருவரும் உமையாள்புரம் துரைசுவாமி ஐயர், சாத்தனூர் பஞ்சநதய்யர் ஆகியோரிடம் கீர்த்தனைகளைக் கற்றுக் கொண்டனர்.

இசை வாழ்க்கை[தொகு]

கச்சேரியில் இரு நாதசுவரங்களை இணைந்து வாசிக்கும் வழக்கத்தைக் கொண்டுவந்தவர்கள் திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை – சிவசுப்பிரமணிய பிள்ளை சகோதரர்கள் ஆவர்.

புகழ்பெற்ற தவில் கலைஞர்களான ஸ்ரீவாஞ்சியம் கோவிந்தப் பிள்ளை, மன்னார்குடி பல்லுப் பக்கிரிப் பிள்ளை, அம்மாப்பேட்டை பக்கிரிப்பிள்ளை, வழிவூர் முத்துவீர் பிள்ளை ஆகியோர் இச்கோதரர்களுக்கு தவில் வாசித்துள்ளனர்.

தீட்சிதர் கீர்த்தனைகளில் 50 பாடல்களை தீட்சிதர் கீர்த்தனப் பிரகாசிகை எனும் பெயரில் நூலாக நடராஜசுந்தரம் பிள்ளை வெளியிட்டார்[1]. முறையான பாட அமைப்பினை இந்த நூல் கொண்டிருந்தது.

பிரபல புல்லாங்குழல் கலைஞர் திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளை, நடராஜசுந்தரத்தின் மூத்த மகனாவார்.

மறைவு[தொகு]

1903 ஆம் ஆண்டு நவம்பர் 16 அன்று நடராஜசுந்தரம் பிள்ளை காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "A Tamil tribute to Muthuswami Dikshitar". தி இந்து. 19 நவம்பர் 2010. 31 டிசம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.

உசாத்துணை[தொகு]