திருப்பரங்குன்றம் மலை
| திருப்பரங்குன்றம் மலை | |
|---|---|
திருப்பரங்குன்றம் மலை | |
| உயர்ந்த புள்ளி | |
| உயரம் | 270.46 m (887.3 அடி) |
| ஆள்கூறு | 9°52′34″N 78°04′18″E / 9.8761°N 78.0717°E |
| பெயரிடுதல் | |
| பெயரின் மொழி | தமிழ் |
| புவியியல் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | மதுரை மாவட்டம் |
திருப்பரங்குன்றம் மலை என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாநகரில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறு மலையாகும்.[1][2]இம்மலைப் பகுதியில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது.
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 270.46 மீ. உயரத்தில், (9°52′34″N 78°04′18″E / 9.8761°N 78.0717°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு திருப்பரங்குன்றம் மலை அமையப் பெற்றுள்ளது.
விபரங்கள்
[தொகு]இம்மலையடிவாரத்தில், குடைவரைக் கோயிலான சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலானது சிவன், பெருமாள், துர்க்கை, பிள்ளையார் மற்றும் முருகன் ஆகிய ஐவரின் உருவங்களையும் இம்மலைப்பாறையில் குடைந்து உருவாக்கப்பட்டதாகும். மலையின் மேற்பகுதியில் காசி விசுவநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் பாட்சா தர்கா ஆகிய வழிபாட்டுத்தலங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.[3]
சிறப்புகள்
[தொகு]மதுரை நகரிலிருந்து தென்மேற்குத் திசையில் சுமார் 9 கி. மீ. தூரத்தில் இருக்கும் திருப்பரங்குன்றத்தின் இம்மலையடிவாரத்தில் கிழக்குப் பக்கமாக 'சரவணப் பொய்கை' என்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலின் தீர்த்தம் அமைந்துள்ளது.[4]
மலை மீது 'காசித்தீர்த்தம்' என்ற நீர்நிலை ஒன்று உள்ளது. இத்தீர்த்தம் அமைந்துள்ள பகுதியில் காசி விசுவநாதர், காசி விசாலாட்சி மற்றும் சுப்பிரமணிய சன்னதிகள் அமைந்துள்ளன.[5]
ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை மாதமும், கார்த்திகை நட்சத்திரமும் இணைந்து வரும் பௌர்ணமி நாளில் இம்மலை உச்சியில் 'மகாதீபம்' ஏற்றி வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளது.[6]
சூழல் பாதிப்பு
[தொகு]ஆண்டுதோறும் அதிகரித்து வரும் பக்தர்களின் வசதிக்காகவும், கிரிவலம் செய்பவர்களுக்காக ஏற்படுத்தப்படும் மேம்பாட்டு பணிகளால், இம்மலையின் இயற்கை சூழலுக்கும், மலையடிவார சுற்றுப்பகுதிகளுக்கும் ஆபத்துகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பாலு சத்யா / Balu Sathya (2010-12-01). தேவர் - ஒரு வாழ்க்கை / Devar - Oru Vazhkai (in ஆங்கிலம்). Kizhakku Pathippagam. ISBN 978-81-8493-586-8.
- ↑ Indira Soundarrajan (2018-01-01). Sittha Jaalam. Pustaka Digital Media. ISBN 978-93-86583-28-4.
- ↑ "கோவில், தர்காவை மையமாக வைத்து அரசியலா..? திருப்பரங்குன்றம் மலையில் நடந்தது என்ன?". tamil.news18.com. 2025-02-04. Retrieved 2025-02-05.
- ↑ Lavanya (2023-05-15). "திருப்பரங்குன்றம் - முதல் படைவீடு". www.maalaimalar.com. Retrieved 2025-02-05.
- ↑ இல.சைலபதி, என்.ஜி.மணிகண்டன் (2021-04-02). "வைகை நதிக்கரை ஆலயங்கள் - 11". www.vikatan.com/. Retrieved 2025-02-05.
- ↑ The Hindu Bureau (2024-12-13). "'Mahadeepam' lit atop Tirupparankundram hillock in Madurai". The Hindu (in Indian English). Retrieved 2025-02-05.
- ↑ "திருப்பரங்குன்றம் மலையில் இயற்கை சூழலுக்கு ஆபத்து : மேம்பாட்டுத் திட்டங்களால் மலையடிவாரம் வெப்பமடைவதாக சர்ச்சை". Hindu Tamil Thisai. 2016-11-05. Retrieved 2025-02-05.