திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கு
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கு என்பது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூனில் கார்த்திகை தீபம் ஏற்றுவதைக் குறித்த வழக்காகும். திருப்பரங்குன்றம் மலையில் தீபத்துாணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என இராம. இரவிக்குமார் என்ற இந்து சமயச் செயற்பாட்டாளர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் 03 டிசம்பர் 2025 அன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என 02 டிசம்பர் 2025 அன்று தீர்ப்பளித்தார்[1]. இதனை ஒட்டி 03 டிசம்பர் 2025 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பித்தார். இதனால் மலையில் தீபம் ஏற்ற முயன்ற இந்து சமய ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாத விசயத்தை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக 04 டிசம்பர் 2025 அன்று மனுதாரர் இராம. இரவிக்குமார் நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநானின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, இந்து சமய அறநிலையத் துறையின் உதவியுடன் தீபத்துாணில் தீபம் ஏற்ற மனுதாரர் இராம. இரவிக்குமார் மற்றும் 10 பேர் உதவியுடன் கார்த்திகை தீபம் ஏற்ற காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.[2]
நீதிமன்ற அவமதிப்பு
[தொகு]இராம. இரவிக்குமார் தரப்பினர் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலயத்துறையினர் அனுமதிக்கவில்லை. இச்செயல் நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என தனி நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் 16 டிசம்பர் 2025 அன்று அறிவித்தார்.[3]
மேல் முறையீடு & தீர்ப்பு
[தொகு]திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றினால் இரு சமயத்தவர்களிடையே பிரச்சனை ஏற்படும் மற்றும் தனிநீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை நகர காவல் ஆணையர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் இரண்டு நீதிபதி அடங்கிய அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.
நீதியரசர்கள் கோ. ஜெயச்சந்திரன் மற்றும் கே. கே. இராமகிருஷ்ணன் அமர்வு இவ்வழக்கை விசாரித்து 6 சனவரி 2026 அன்று தீர்ப்பு வழங்கினர். தமிழக அரசின் இம்மேல்முறையீட்டு மனுவை நீதியரசர்கள் தள்ளுபடி செய்ததுடன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றினால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எனும் தமிழ்நாடு அரசின் கூற்றை நீதியரசர்கள் ஏற்கவில்லை. மேலும் திருப்பரங்குன்றம் கோயில் தேவஸ்தானத்தினர் மட்டுமே, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனத்தீர்ப்பளித்தனர்.[4][5][6]

இந்து முன்னணியினர் மீது வழக்கு
[தொகு]திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறை நிறைவேற்றவில்லை. இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவுபடி திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணியினர் 3 டிசம்பர் 2025 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் இந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். காவல்துறை இவ்வழக்கை விசாரிக்க 27 சனவரி 2026 அன்று நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.[7]
தல விருட்சத்தில் தர்க்கா கொடி
[தொகு]திருப்பரங்குன்றம் மலை உச்சியில் முருகன் கோயிலின் தல விருட்சமான கல்லத்தி மரத்தில் திருப்பரங்குன்றம் மலை தர்க்கா அமைப்பினர் பிறைக் கொடி ஏற்றினர்[8]. இதனை எதிர்த்து இந்து அமைப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன் அமர்வில் வழக்கு தொடுத்தனர். நீதியரசரின் தீர்ப்புக்கு இணங்க கல்லத்தி மரத்தில் தர்கா தரப்பில் கட்டியிருந்த பிறைக் கொடியை கோயில் அலுவலர்கள் 16 சனவரி 2026 அன்று அகற்றினர்[9].
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு
[தொகு]திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.[10][11]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ திருப்பரங்குன்றம்: `மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்' - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
- ↑ HC permits deepam atop Thirupparankundram hill
- ↑ நீதிமன்ற உத்தரவை மீறுவதை ஏற்க முடியாது: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப அவமதிப்பு வழக்கில் நீதிபதி திட்டவட்டம்
- ↑ திருப்பரங்குன்ற தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்: தமிழக அரசின் அப்பீல் மனு டிஸ்மிஸ்
- ↑ Thiruparankundram Deepam Row: Madras High Court upholds lighting of Karthigai Deepam at Thiruparankundram
- ↑ Thirupparankundram row: Madurai Bench of Madras High Court upholds order directing temple management to light Karthigai Deepam at ‘deepathoon’ - The Hindu
- ↑ திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக் கோரி போராடிய இந்து முன்னணியினர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை
- ↑ திருப்பரங்குன்றம் மலையில் கோவிலுக்குச் சொந்தமான மரத்தில் பிறை கொடியா? புதிய சர்ச்சை
- ↑ திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்லத்தி மரத்திலிருந்த தர்கா கொடி அகற்றம்
- ↑ திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோரினார் மதுரை ஆட்சியர்
- ↑ Contempt Petition Filed Against Madurai Collector, Senior Cops In Deepam Row