திருநெல்வேலி மாவட்டம் (சென்னை மாகாணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருநெல்வேலி மாவட்டம் (Tinnevely District) என்பது பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்துக்கு உட்பட்ட ஒரு மாவட்டம் ஆகும். இது தற்போதைய தமிழ்நாட்டின் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி , விருதுநகர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

1901 ஆம் ஆண்டில், திருநெல்வேலி மாவட்ட மக்கள் தொகையானது 2,059,607 ஆகும். இதில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் முஸ்லிம் மற்றும் கிறித்தவ மக்களாவர்.

நிர்வாகம்[தொகு]

இந்த மாவட்டமானது நான்கு நகராட்சிகளைக் கொண்டு இருந்தது. அவை: திருநெல்வேலி, ஸ்ரீவில்லிப்புத்தூர், தூத்துக்குடி, பாளையங்கோட்டை ஆகியவை ஆகும்.

வட்டங்கள்[தொகு]

  • அம்பாசமுத்திரம் (பரப்பு:1,250 சதுர கிலோமீட்டர்கள் (481 sq mi); தலைமையகம்: அம்பாசமுத்திரம்)
  • நாங்குனேரி (Area:1,900 சதுர கிலோமீட்டர்கள் (730 sq mi); தலைமையகம்: நாங்குனேரி)
  • ஒட்டப்பிடாரம் (Area:2,780 சதுர கிலோமீட்டர்கள் (1,072 sq mi); தலைமையகம்: ஒட்டப்பிடாரம்)
  • சங்கரநயினார் கோவில் (Area:2,000 சதுர கிலோமீட்டர்கள் (770 sq mi); தலைமையகம்: சங்கரநயினார் கோவில்)
  • சாத்தூர் (Area:1,500 சதுர கிலோமீட்டர்கள் (560 sq mi); தலைமையகம்: சாத்தூர்)
  • ஸ்ரீவைகுண்டம் (Area:1,400 சதுர கிலோமீட்டர்கள் (542 sq mi); தலைமையகம்: ஸ்ரீவைகுண்டம்)
  • ஸ்ரீவிலிபுத்தூர் (Area:1,520 சதுர கிலோமீட்டர்கள் (585 sq mi); தலைமையகம்: ஸ்ரீவிலிபுத்தூர்)
  • தென்காசி (Area:1,250 சதுர கிலோமீட்டர்கள் (481 sq mi); தலைமையகம்: தென்காசி)
  • திருநெல்வேலி (Area:850 சதுர கிலோமீட்டர்கள் (328 sq mi); தலைமையகம்: திருநெல்வேலி)