திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் என்பது திருநெல்வேலி மாநகராட்சியில் திருநெல்வேலி சந்திப்புத் தொடருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய பேருந்து நிலையம் வேந்தான்குளம் பகுதியில் அமைக்கப்படுவதற்கு முன்பு அனைத்து ஊர்களுக்கும் இந்தப் பேருந்து நிலையத்திலிருந்துதான் புறநகர்ப் பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட்டன. தற்போது இந்தப் பேருந்து நிலையம் நகரப் பேருந்து நிலையமாகச் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கும் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.