திருநெல்வேலி-பிலாசுபூர் விரைவுத் தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருநெல்வேலி சந்திப்பு~பிலாசுபூர் சந்திப்பு விரைவு இரயில்
Tirunelveli Junction - Bilaspur Junction Express
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவு இரயில்
முதல் சேவை4 சனவரி 2010; 14 ஆண்டுகள் முன்னர் (2010-01-04)
நடத்துனர்(கள்)தென்னக இரயில்வே
வழி
தொடக்கம்திருநெல்வேலி சந்திப்பு
இடைநிறுத்தங்கள்22
முடிவுபிலாசுபூர் சந்திப்பு
ஓடும் தூரம்2151 கிலோமீட்டர்
சேவைகளின் காலஅளவுவாராந்தரி
தொடருந்தின் இலக்கம்22620 / 22619
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)ஏ.சி 2 அடுக்கு, ஏ.சி 3 அடுக்கு, படுக்கை வசதி இரண்டாம் வகுப்பு,பொதுப் பெட்டிகள்
இருக்கை வசதிஆம்
படுக்கை வசதிஆம்
உணவு வசதிகள்ஆம்
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புஎல்.எச்.பி பெட்டிகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்) Provincial gauge
வேகம்57.5 km/h (36 mph)
வழிகாட்டுக் குறிப்புப் படம்

திருநெல்வேலி~பிலாசுபூர் விரைவு இரயில் (Tirunelveli Bilaspur Express) என்பது இந்திய இரயில்வேயில் இடம்பெற்றுள்ள தெற்கு இரயில்வே மண்டலத்தைச் சார்ந்த ஒரு விரைவு இரயில் ஆகும். 22620/22619 என்ற எண்களால் இந்த அதிவிரைவுத் தொடர்வண்டி அடையாளப்படுத்தப்படுகிறது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் 2010 ஆம் ஆண்டு சனவரி மாதம் 4 ஆம் தேதி அன்று முதல் இந்த இரயில் சேவை தொடங்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதிவிரைவு வண்டி என்று வகைப்படுத்தப்படும் இது இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி சந்திப்புக்கும் சத்தீசுகர் மாநிலத்தின் பிலாசுபூர் சந்திப்புக்கும் இடையில் வாராந்திர இரயில் சேவையாக இயக்கப்பட்டு ஓடுகிறது[1].

திருநெல்வேல்யிலிருந்து பிலாசுபூர் செல்லும் இரயில் வண்டியின் எண் 22620 ஆகும். இதே இரயில் பிலாசுபூரிலிருந்து திருநெல்வேலிக்கு திரும்புகையில் அந்த வண்டியின் எண் 22619 ஆகும். திரும்பி வருகையில் இது கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா,மகாராட்டிரா மற்றும் சத்தீசுகர் மாநிலங்கள் வழியாக பயணம் செய்து திருநெல்வேலியை வந்து அடைகிறது[2].

இரயில் பெட்டிகள்[தொகு]

திருநெல்வேலி - பிலாசுபூர் 22620/19 என்ற அடையாளத்துடன் இயங்குகின்ற இந்த விரைவு இரயில் வண்டியில் முதல் வகுப்பு 2-அடுக்கு குளிரூட்டும் பெட்டி ஒன்றும், 3-அடுக்கு குளிரூட்டும் பெட்டிகள் இரண்டு, 12 படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகள், நான்கு பொதுப் பெட்டிகள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இரண்டு மற்றும் இரண்டு பொருட்கள் கொண்டுசெல்லும் பெட்டி, இரண்டு உயர்தர சரக்கு கொண்டு செல்லும் பெட்டிகள் ஆகியவை இணைக்கப்பட்டு பயணிகளின் பயணத்திற்கு உதவுகிறது. மேலும் இவ்விரு இரயில்களிலும் உணவுக்காக சமையல் தயாரிப்பு பெட்டிகள் ஏதும் இணைக்கப்படவில்லை..

2018 ஆம் ஆண்டு சூன் மாதம் 3 ஆம் தேதிமுதல் எல்.எச்.பி ரேக் சேவை எனப்பட்டும் நவீன வகை பெட்டிகள் இந்த இரயிலில் இணைக்கப்பட்டன[3].


இந்தியாவில் பெரும்பாலான இரயில் சேவைகள் வழக்கம்போலவே இந்திய இரயில்வேயின் விருப்பப்படி வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பெட்டிகளில் உரிய வசதிகள் அமைக்கப்படுகிறது.

சேவைகள்[தொகு]

திருநெல்வேலி சந்திப்பு முதல் பிலாசுபூர் சந்திப்பு வரை விரைவு இரயில் எண்:22620 , 2,151 கிமீ அல்லது 1,337 மைல் தூரத்தை 37 மணி 10 நிமிடங்களில் ஒரு மணி நேரத்திற்கு 58 கிலோமீட்டர் என்ற வேகத்தில் கடந்து செல்கிறது. பிலாசுபூர் சந்திப்பு முதல் - திருநெல்வேலி சந்திப்பு வரையிலான விரைவு இரயில் எண்: 22619 ஒரு மணி நேரத்திற்கு 57 கிலோமீட்டர் என்ற வேகத்தில் 37 மணி 25 நிமிடங்களில் கடந்து செல்கிறது.

இரயிலின் சராசரி வேகம் மணிக்கு 55 கிமீ அல்லது 34 மைல் ஆகும். இரயில்வே விதி முறைகளின்படி இந்த இரயிலில் பயணம் மேற்கொள்ள அதிவிரைவு இரயில் என்று குறிப்பிடப்பட்டு அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. .

வழிப்பாதை[தொகு]

திருநெல்வேலி சந்திப்பு முதல் பிலாசுபூர் சந்திப்பு வரை செல்லும் 22620 விரைவு இரயில் எர்ணாகுளம் சந்திப்பு, பாலக்காடு சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு, ரேணிகுண்டா சந்திப்பு, விசயவாடா சந்திப்பு, பலார்சா சந்திப்பு, நாக்பூர் சந்திப்பு, கோண்டியா சந்திப்பு, ராய்ப்பூர் சந்திப்பு மற்றும் இறுதியாக பிலாசுபூர் சந்திப்பு என்ற முறையில் பயணிக்கிறது. இவ்விரண்டு சந்திப்புகளுக்கும் இடையில் 27 சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.

இழுவை[தொகு]

பாதை முழுமையாக மின்மயமாக்கப்பட்டதால், ஈரோடு சந்திப்பு அல்லது ராயபுரம் சார்ந்த வேப்-4 என்ற இரயில் இயந்திரம் இரயிலின் முழு பயணத்திற்கும் தேவையான சக்தியை அளிக்கிறது.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "43 new trains including four Garib Raths introduced". இந்திய அரசு. Press Information Bureau. பார்க்கப்பட்ட நாள் 13 February 2009.
  2. "Trains to be regulated". The Hindu. 9 December 2016. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/Trains-to-be-regulated/article16781876.ece. பார்த்த நாள்: 10 December 2018. 
  3. "LHB rake for TEN BSP Superfast express". 30 May 2018.

புற இணைப்புகள்[தொகு]