உள்ளடக்கத்துக்குச் செல்

திருநீலகண்டர் (1939 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருநீலகண்டர்
1939 திருநீலகண்டர் பாட்டுப்புத்தகத்தின் முகப்பு
இயக்கம்பி. கே. ராஜா சாண்டோ
தயாரிப்புஎம். கே. தியாகராஜ பாகவதர்
தியாகராஜர் பிலிம்ஸ்
கதைஇளங்கோவன் (உரையாடல்)
இசைபாபநாசம் சிவன்
நடிப்புஎம். கே. தியாகராஜ பாகவதர்
கே. லட்சுமிகாந்தம்
செருகளத்தூர் சாமா
என். எஸ். கிருஷ்ணன்
டி. எஸ். துரைராஜ்
டி. ஏ. மதுரம்
பால சரஸ்வதி
எஸ். எஸ். ராஜமணி
எஸ். ஜி. செல்லப்பா ஐயர்
யானை வைத்தியநாதய்யர்
டி. சுந்தரமய்யர்
ராதாகிருஷ்ண பாகவதர்
எம். ஆர். சுவாமிநாதன்
எம். ஆர். மீனாட்சிசுந்தரம்
எம். முத்துராமலிங்கம்
டி. எஸ். மாணிக்கம்
வி. சுப்புலட்சுமி
வெளியீடுஆகத்து 13, 1939
ஓட்டம்.
நீளம்20000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திருநீலகண்டர் (Thiruneelakantar) 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, பி. கே. ராஜா சாண்டோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், செருகளத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] பாகவதரின் பாடல்களுக்காகவும், என். எஸ். கிருஷ்ணன்-டி. ஏ. மதுரம் ஆகியோரின் நகைச்சுவைக்காகவும் இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது,[2][3] பிரபலமான நாகசுரக் கலைஞர் டி. என். ராஜரத்தினம் பிள்ளை இத்திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் தோன்றினார்.[3]

திருநீலகண்டர் திரைப்படம்

திரைக்கதை

[தொகு]

63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனாரின் வாழ்க்கைச் சரிதம் இத்திரைப்படத்தின் கதையாகும்.[3]

நடிகர்கள்

[தொகு]
நடிகர் பெயர் கதாபாத்திரம்
எம். கே. தியாகராஜ பாகவதர் திருநீலகண்டர் (அம்பலவாணர்)
செருகளத்தூர் சாமா சிவன், சிவயோகி
எஸ். ஜி. செல்லப்பா ஐயர் சாது
யானை வைத்தியநாதையர் சந்நியாசி
டி. சுந்தரம் ஐயர் நீலகண்டப் பிரசங்கி
ராதாகிருஷ்ண பாகவதர் தில்லை மூவாயிரவர் - சபைத் தலைவர்
கொத்தமங்கலம் சுப்பு முத்து தீட்சிதர்
எம். ஆர். சுவாமிநாதன் பைராகி, முத்தன்
எம். ஆர். மீனாட்சி சுந்தரம் ஞானியார்
என். எஸ். கிருஷ்ணன் சொக்கன்
டி. எஸ். துரைராஜ் மருதை
எம். முத்துராமலிங்கம் கொக்கு
டி. எஸ். மாணிக்கம் குமாரசாமி

இவர்களுடன் ஈ. கிருஷ்ணமூர்த்தி, சேலம் சுந்தரம் ஐயர், ஜி. வி. கிருஷ்ணமூர்த்தி, எஸ். ஆர். திருவேங்கடம், ஜி. பி. கணேசய்யர், எம். தங்கையா, ஏ. எஸ். மதனகோபால் ஆகியோரும் நடித்திருந்தனர்.[1]

நடிகைகள்

[தொகு]
நடிகை பெயர் கதாபாத்திரம்
பாப்பா கே. லட்சுமிகாந்தம் நீலாயதாட்சி
எஸ். எஸ். ராஜாமணி கலாவதி (கோவில் தாசி)
வி. சுப்புலட்சுமி அலங்காரம்
ஆர். பாலசரஸ்வதி சரசுவதி (சிறுமி)
பி. சாரதாம்பாள் பார்வதி
டி. கே. ருக்மணி தங்கம்மாள்
எஸ். ஆர். ரமாமணி பாய் வைஷ்ணவி
ஜெ. சுசீலாதேவி மாயா
டி. ஏ. மதுரம் பொம்மி

இவர்களுடன் டி. வி. அன்னபூரணி, எம். ஆர். சரஸ்வதி, டி. பி. தனலட்சுமி, எம். ஆர். அல்லி, ஆர். சாரதாம்பாள், எம். எஸ். மீனாட்சிசுந்தரி, பேபி சகுந்தலா, பேபி சுப்புலட்சுமி ஆகியோரும் நடித்திருந்தனர்.[1]

பாடல்கள்

[தொகு]

இப்படத்தில் மொத்தம் 21 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.[1] பாபநாசம் சிவன் பாடல்களை இயற்றி, இசையமைத்திருந்தார். இவற்றில் தீன கருணாகரனே என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.[2] திருவாலியமுதனார் இயற்றிய பவழ மால் என்ற திருவிசைப்பா டி. என். ராஜரத்தினம் பிள்ளையின் இசையமைப்பில் நாட்டை இராகத்தில் இடம்பெற்றது.

  • சிங்கார வேலனுக்குச் சிறிய அகல்கள் சமைப்பேன்
  • தோழி ஒன்றாய்க் கூடி விளையாடுவோம் வாரீர்
  • உன் அழகைக் காண இரு கண்கள் போதாதே
  • இது சகஜம் இது சகஜம் எங்கும் சகஜம்
  • பண்டரிநாதா நின் அருள் வெளியில்
  • ஆகா என்ன பேரானந்தம் கண்கள் வேணும்
  • பவள மால் வரையைப் பனி படர்ந்தனைய தோர் (இராகம்: நாட்டை)
  • பங்கையன் நாவில் வாழும் பான்மை
  • ஆடும் தெய்வம் நீ அருள்வாய் (இராகம்: காம்போதி)
  • சிதம்பரநாதா திருவருள் நாதா (இராகம்: ஹேமவதி)
  • மனம் நினைந்து மகிழ்ந்தேன் (இராகம்: இந்துஸ்தான்)
  • இன்பமுண்டோ வீணே இல்லம் துறந்தார்க்கு
  • ஒருநாள் ஒரு பொழுதாகிலும் சிவநாமம் உச்சரிக்க வேண்டும் (இராகம்: கமாஸ்)
  • பனகேந்திர பூஷ்ண சங்கர (இராகம்: புகவனகாந்தாரி)
  • தீனகருணாகரனே நடராஜா
  • நானோர் பரதேசி (இராகம்: குறிஞ்சி)
  • உணவுதரும் அன்னை போலே
  • என்பாவம் என்ன செய்வேன் (இராகம்: நீலாம்பரி)
  • மறை வாய் புதைத்த ஓடு மறைந்த மாயம் ஏதோ (இராகம்: தர்பார்)
  • ஆதிதேவனே தில்லை நாதா
  • சகலபுவன நாயக நின்தாள் பணிந்த

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 திருநீலகண்டர் 1939 பாட்டுப் புத்தகம். பார்சன்ஸ் வீதி, கொழும்பு, பிரித்தானிய இலங்கை: சிலோன் பிரின்டர்சு. 1939.
  2. 2.0 2.1 "Blast from the past - Thiruneelakantar (1939)". செப்டம்பர் 3, 2009. Archived from the original on 18 சனவரி 2020. {{cite web}}: Check date values in: |date= (help); Unknown parameter |authur= ignored (|author= suggested) (help)
  3. 3.0 3.1 3.2 "MKT Filmography Part I". M. K. Thyagaraja Bhagavathar fan site. Archived from the original on 4 சூலை 2008. பார்க்கப்பட்ட நாள் 12 அக்டோபர் 2008.

வெளி இணைப்புகள்

[தொகு]