திருநாதர் குன்றுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருநாதர் குன்றுகள், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், செஞ்சிக் கோட்டைக்கு வடக்கே உள்ளது. இம்மலையை சிறுகடம்பூர் மலையென்றும், இப்பகுதியை சிம்மபுரி என்றும் அழைப்பர். திருநாதர் குகைக் குன்றுகளில் கிபி 4 - 5-ஆம் நூற்றாண்டுகளில் சமணர்களின் 24 தீர்த்தங்கரர்களின் அமர்ந்த நிலை இரண்டடுக்குச் சிற்பங்களும், முதிர்ந்தநிலை பிராமி எழுத்துமுறையிலிருந்து, வட்டெழுத்தாக தமிழ் எழுத்துகள் வளர்ந்த, மாறுதல் அடைகிற காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டு இங்குதான் முதன்முதலில் காணப்படுகிறது.[1] [2]இச்சமணத் தலத்தை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பராமரிக்கிறது.

தமிழுக்கு எழுத்தைத் தந்த மலை[தொகு]

மலையின் சிறப்பாக, ‘ஐ’ எனும் தமிழ் எழுத்து, திருநாதர்குன்று கல்வெட்டில்தான் முதலில் காணப்பட்டது..இதனால் இம்மலை தமிழுக்கு எழுத்து தந்த மலை எனும் சிறப்பு பெற்றது. . இங்குள்ள ஒரு கல்வெட்டு,சந்திரநந்தி ஆசிரியர் எனும் சமணத்துறவி 57 நாட்கள் உண்ணா நோன்பிருந்து வீடுபேறு பெற்றார் என்கிறது. மற்றொரு கல்வெட்டு, இளையபட்டாரகர் எனும் சமணத்துறவி முப்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தார் என்கிறது. சமீபத்தில் காணப்பட்ட கல்வெட்டு கோயிலில் விளக்கேற்ற நானூறு ஆடுகள் தானம் தரப்பட்டதாகத் தெரிவிக்கிறது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. திருநாதர்குன்று
  2. திருநாதர் குன்று - நிசீதிகைக் கல்வெட்டும், சிற்பத் தொகுதியும்
  3. திருநாதர்குன்று கல்வெட்டுகளும், சிற்பங்களும்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருநாதர்_குன்றுகள்&oldid=2761582" இலிருந்து மீள்விக்கப்பட்டது