திருநரையூர் விநாயகர் திரு இரட்டைமணிமாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருநரையூர் விநாயகர் திரு இரட்டைமணிமாலை [1] என்னும் நூல் நம்பியாண்டார் நம்பி பாடிய 10 சிற்றிலக்கிய நூல்களில் ஒன்று. நூல் தோன்றிய காலம் 11 ஆம் நூற்றாண்டு. நூலாசிரியர் நம்பி திருநரையூரில் பிறந்தவர். தனக்கு அருள் பாலித்தவர் என்று அவ்வூர் விநாயகப் பெருமான் மீது இரட்டைமணிமாலை பாடினார்.

வீரணக்குடி பெண் ஒருத்தி தவம் செய்து விநாயகப் பெருமானுக்குத் தங்கையாகவும், முருகனுக்கு அக்காவாகவும் பிறந்தாள் என்னும் புதிய செய்தி ஒன்று இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் குறிப்பிடும் பாடல். [2]

நாரணன் முன் பணிந்து ஏத்த நின்று எல்லை நடாவிய அத்
தேர் அணவும் திரு நரையூர் மன்னும் சிவன் மகளே
காரணனே, எம் கணபதியே, நல் கரி வதனா
ஆரண நுண் பொருளே என்பவர்க்கு இல்லை அல்லல்களே

இந்த நூலிலுள்ள வெண்பாப் பாடல் ஒன்று - எடுத்துக்காட்டு [3]

மருப்பை ஒரு கை கொண்டு நரையூர் மன்னும்
பொருப்பை அடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்த எண்ணுகின்ற எறும்பு அன்றே, அவரை
வருந்த எண்ணுகின்ற மலம்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. 
  2. கட்டளைக் கலித்துறையாப்பில் அமைந்துள்ள இந்தப் பாடல் பொருள்நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டு இங்குத் தரப்படுகிறது
  3. பொருள்நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டு இங்குத் தரப்படுகிறது