திருநந்திபுரம் செம்மனேரி ஆண்டவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு செம்மனேரி ஆண்டவர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விழுப்புரம்
அமைவிடம்:செ.குண்ணத்தூர் ரோடு, திருநந்திபுரம், விழுப்புரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:விழுப்புரம்
மக்களவைத் தொகுதி:விழுப்புரம்
கோயில் தகவல்
மூலவர்:செம்மனேரி ஆண்டவர்
தாயார்:பொற்கலை, பூரணி
சிறப்புத் திருவிழாக்கள்:மாசி மகம், விஜயதசமி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

திருநந்திபுரம் செம்மனேரி ஆண்டவர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், திருநந்திபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் செம்மனேரி ஆண்டவர், பொற்கலை, பூரணி சன்னதிகளும், விநாயகர், சப்தகன்னியர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் மாசி மகம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் விஜயதசமி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]