திருநங்கையர் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருநங்கை தினம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

திருநங்கைகளின் சமூகப் பாதுகாப்பைக் கருதி, அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் நாளை திருநங்கையர் நாள் எனக் கொண்டாட தமிழக அரசு மார்ச் 11, 2011 அன்று அரசாணை பிறப்பித்தது.[1][2] ஏப்ரல் 15, 2008 ஆம் ஆண்டு தமிழக அரசால் திருநங்கைகளுக்கு என தனி நலவாரியம் ஒன்று அமைக்கப்பட்டது. திருநங்கைகளைச் சிறப்பிக்கும் வகையில் இந்நலவாரியம் அமைக்கப்பட்ட நாளை திருநங்கைகள் நாளாக அறிவிக்க வேண்டும் என்ற திருநங்கைகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இவ்வறிவிப்பை வெளியிட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. April 15 to be observed as Transgenders Day in state
  2. ஏப்ரல் 15-ந்தேதி “திருநங்கையர் தினம்” கருணாநிதி உத்தரவு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருநங்கையர்_நாள்&oldid=1966009" இருந்து மீள்விக்கப்பட்டது