திருத்தந்தை பிரான்சிசு உடன் மறைமுதுவர் கிரீலின் கூட்டறிக்கை
திருத்தந்தை பிரான்சிசு உடன் மறைமுதுவர் கிரீலின் கூட்டறிக்கை (Joint Declaration of Pope Francis and Patriarch Kirill) பெப்ரவரி 2016இல் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை பிரான்சிசும் உருசிய மரபுவழித் திருச்சபையின் தலைவர் மறைமுதுவர் கிரீலும் மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் சந்திப்பை அடுத்து வெளியிடப்பட்டது. 1054ஆம் ஆண்டு பெரும் சமயப் பிளவால் பிரிபட்ட கத்தோலிக்க, மரபுவழித் திருச்சபைகளிடையே மீண்டும் உறவை நிலைநாட்டிட பல்லாண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த தொடர் முயற்சிகளின் இடுகுறியான நிகழ்வாக இந்த இரு திருச்சபைகளின் தலைவர்களும் முதல் முறையான சந்திப்பு நடந்துள்ளது.[1]
இந்தச் சந்திப்பும் 30-புள்ளி கூட்டறிக்கையும் உலகெங்கும் ஊடகங்களில், குறிப்பாக உருசியாவில், வெளிவந்துள்ளன; இரு தலைவர்களும் மத்திய கிழக்கிலும் அப்பகுதி போர்களிலும் கிறித்தவர்கள் துன்புறுத்தப்படுவதை குறிப்பிட்டுள்ளனர். மேலும் இக்கூட்டறிக்கையில் இருத் திருச்சபைகளுக்குமிடையே கிறித்தவ ஒற்றுமை மீட்கப்படும் என்ற அவர்களது நம்பிக்கை முன்மொழியப்பட்டுள்ளது. தவிரவும் இறைமறுப்பு, சமய சார்பின்மை, நுகர்வியம், புலம் பெயர்ந்தோரும் ஏதிலிகளும், குடும்பத்தின் முக்கியத்துவம், திருமணத்தின் சிறப்பு, கருக்கலைப்பு, வதையா இறப்பு குறித்த கவலைகளையும் பதிந்துள்ளது.[2]
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ "Unity call as Pope Francis holds historic talks with Russian Orthodox Patriarch". BBC. 2016-02-13 இம் மூலத்தில் இருந்து 2016-02-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160212224729/http://www.bbc.co.uk/news/world-latin-america-35565085.
- ↑ Pope Francis; Patriarch Kirill (2016-02-12). "Joint Declaration of Pope Francis and Patriarch Kirill of Moscow and All Russia". written at Havana, Cuba. Vatican City இம் மூலத்தில் இருந்து 2016-02-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160215202949/http://w2.vatican.va/content/francesco/en/speeches/2016/february/documents/papa-francesco_20160212_dichiarazione-comune-kirill.html.