திருச்செல்வம் திருக்குமரன்
திருச்செல்வம் திருக்குமரன் | |
---|---|
பிறப்பு | யாழ்ப்பாணம் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | கவிஞர், எழுத்தாளர், சூழலியலாளர், சுதந்திர ஊடகவியலாளர் |
பெற்றோர் | திருச்செல்வம், கௌரி |
வலைத்தளம் | |
https://www.thirupoems.com/ |
திருச்செல்வம் திருக்குமரன் ஈழத்துக் கவிஞரும்[1] எழுத்தாளரும், சூழலியலாளரும், ஊடகவியலாளரும் ஆவார்[2] யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.[3]
திருச்செல்வம், கெளரி ஆகியோருக்கு ஏக புத்திரனாக இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இவரது முதல் கவிதை 1995 ஆம் ஆண்டில் உதயன் பத்திரிகையில் பிரசுரமானது. இலங்கையில் தொலைக்காட்சியிலும் பத்திரிகையிலும் ஊடகவியலாளராகவும் அமைச்சில் அதிகாரியாகவும் பணியாற்றியவர். பின்னர் புலம் பெயர்ந்து வெளிநாடொன்றில் சுதந்திர ஊடகவியலாளராகப் பணியாற்றி வருகிறார்.[3].
இவரது கவிதைகள் ஆங்கிலம், சிங்களம், ஐரியம், இடாய்ச்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வீரகேசரி, தினக்குரல், உதயன், ஜே.டி.எஸ். லங்கா, ஈனீர் பருவ இதழ் (ஐரியம்), ராவய (சிங்களம்) ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. இவரது கவிதைப் புத்தகங்கள் இந்தியா, இங்கிலாந்து, செருமனி, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் இலக்கிய விழாக்களிலும் புத்தகத் திருவிழாக்களிலும் வெளியிடப்பட்டன.[3][4].
இவரது நூல்கள்[தொகு]
- திருக்குமரன் கவிதைகள் (கரிகணன் பதிப்பகம், 2004)[5]
- விழுங்கப்பட்ட விதைகள் (முதல் பதிப்பு 2011: உயிரெழுத்துப் பதிப்பகம், இரண்டாம் பதிப்பு 2015:தமிழோசை பதிப்பகம்)[6][7]
- தனித்திருத்தல் (உயிரெழுத்துப் பதிப்பகம், 2014, ISBN 978-93-8109952-0)
- விடைபெறும் வேளை (யாவரும் பதிப்பகம், 2019)
- சேதுக்கால்வாய்த் திட்டம் (இராணுவ, அரசியல், பொருளாதார, சூழலியல் நோக்கு, ஆய்வுநூல், பிரம்மா பதிப்பகம், 2006)[8]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "படைப்புகளும் திறனாய்வும்- பாகம்- 1-முனைவர் அரங்கராஜ் இனது திறனாய்வில் திருக்குமரனின் கவிதைகள்- காகம்".
- ↑ "திருக்குமரனின் 'விழுங்கப்பட்ட விதைகள்' மீதான எனது பார்வை!".
- ↑ 3.0 3.1 3.2 முல்லை அமுதன் (2012). எழுத்தாளர் விபரத் திரட்டு. லண்டன்: நெய்தல். பக். 251.
- ↑ thamizh. "ETR News" (en-GB).
- ↑ "SEUSL Library Network,South Eastern University of Sri Lanka".
- ↑ "உலகத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு தஞ்சையில் தமிழர் திரண்டனர்".
- ↑ "தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு 8 ஆவது மாநாடு".
- ↑ "SEUSL Library Network,South Eastern University of Sri Lanka".