திருச்செந்தூர் நாழிக்கிணறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு:Infobox Theertham திருச்செந்தூர் நாழிக்கிணறு என்பது தமிழகத்திலுள்ள மிகவும் புண்ணியமான தீர்த்தம் ஆகும்.இது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலுள்ளது.இது திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் அமைந்துள்ள தீர்த்தங்களுள் ஒன்றாகும்.இந்த தீர்த்தத்தில் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கானோர் நீராடுகின்றனர்.

இருப்பிடம்[தொகு]

தூத்துக்குடியிலிருந்து தெற்கே 37 கி.மீ தொலைவிலும்,மதுரையிலிருந்து 180 கி.மீ தொலைவிலும் திருநெல்வேலியிலிருந்து 60 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தெற்கே வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது.

தோற்றக் கதை[தொகு]

சூரபதுமன் என்ற அசுரனை அழிப்பதற்காக முருகப்பெருமான் தன் படைகளுடன் திருச்செந்தூரில் முகாமிட்டு இருந்தார்.அப்பொழுது படைவீரர்களின் தாகத்தினை தீர்ப்பதற்காக தன் வேலினால் இந்த கிணற்றை உருவாக்கியதாக புராணங்கள் கூறுகின்றன்.

சிறப்பு[தொகு]

இந்த தீர்த்தம் கடலுக்கு மிக அருகில் இருந்தாலும் இதன் நீர் இனிப்பு சுவை கொண்டுள்ளது.மேலும் இது அள்ள அள்ள குறையாத நீர்நிலையாகவும் திகழ்கிறது.

அறிவியல் விளக்கம்[தொகு]

கடற்கரையின் நிலப்பரப்பிற்கு அடியிலுள்ள நீர் கடல் மண்ணிணால் வடிகட்டப்பட்டு உவர்ப்பு நீங்கி இனிப்பு சுவையுடன் உருவெடுக்கிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]