திருச்சூர் பூரம் கண்காட்சி
| திருச்சூர் பூரம் கண்காட்சி | |
|---|---|
திருச்சூர் பூரம் கண்காட்சியின் நுழைவு தேக்கிங்காடு மைதானம் | |
| வகை | விவசாய கண்காட்சி |
| நாள் | ஏப்ரல் - ேம |
| அமைவிடம்(கள்) | திருச்சூர் நகரம், கேரளம் |
| இயக்கத்திலுள்ள ஆண்டுகள் | 1932 – தற்போது |
| வலைத்தளம் | |
| http://thrissurpooramfestival.com/thrissur_pooram.html | |
திருச்சூர் பூரம் கண்காட்சி ( Thrissur Pooram Exhibition ) என்பது அகில இந்திய வேளாண், தொழில்துறை, கல்வி மற்றும் கலாச்சார அமைப்பின் மூலம் நடத்தப்படும் கண்காட்சி ஆகும்.இது திருச்சூரில் உள்ள தேக்கின்காடு மைதானத்தில் பரமேக்காவு பகவதி கோயில் தேவசுவம் மற்றும் திருவம்பாடி சிறீ கிருஸ்ணா் கோவில் தேவசவம் ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்படும் ஒரு கண்காட்சியாகும். இது திருச்சூர் பூரத்தின் போது 40 முதல் 50 நாட்கள் வரை நடத்தப்படுகிறது. கண்காட்சிக்கு வருகை புாியும் பாா்வையாளா்கள் மற்றும் நடக்கும் இடத்தின் அளவின் அடிப்படையில் கேரளாவிலேயே மிகப்பெரியக் கண்காட்சி இதுவாகும்.[1][2][3]
வரலாறு
[தொகு]இந்தக் கண்காட்சி திருச்சூர் நகரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களான இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. இது 1932 இல் தொடங்கப்பட்டு 1947 வரை சுதேசிக் கண்காட்சி என்று அழைக்கப்பட்டது. பின்னர் திருச்சூர் மாநகராட்சி 1967 வரை இந்த நிகழ்வை ஏற்றுக்கொண்டு, அகில இந்திய வேளாண், தொழில்துறை மற்றும் கல்விக் கண்காட்சி என்று அழைக்கப்பட்டது. 1963 இல் திருச்சூர் மாநகராட்சி இந்தக் கண்காட்சியை பரமேக்காவு மற்றும் திருவம்பாடி தேவவசுங்களிடம் ஒப்படைத்தது. அடுத்த ஆண்டு முதல், இது திருச்சூர் பூரம் கண்காட்சி என மறுபெயரிடப்பட்டது.[4]
| திருச்சூர் பூரம் கண்காட்சி 2007 | |
|---|---|
| திருச்சூர் பூரம் கண்காட்சி 2011 | |
|---|---|
பங்கேற்கும் நிறுவனங்கள்
[தொகு]இந்தக் கணகாட்சியில் முக்கியமாக பங்கேற்கும் நிறுவனங்களில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகள் அடங்கும். அவற்றில் சில: ஓசதி, கயிறு வாரியம், கேரளக் காவல்துறை, கேரள கலால் வரி, அகில இந்திய வானொலி, இந்திய ரயில்வே (முன்னர்), பாரத் பெட்ரோலியம், பாரத் மின்னணுவியல், பாரத் மண் அள்ளும் இயந்திரங்கள், இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம், கேரள வனத்துறை, இந்திய உணவுக் கழகம், தேங்காய் மேம்பாட்டு வாரியம், இந்துசுதான் செய்தித்தாள் நிறுவனம், கேரள வேளாண் பல்கலைக்கழகம், இந்துசுதான் வானறிவியல் நிறுவனம், இந்திய வருமானவரித் துறை, தொழிற்றுறை(கேரளா), கேரள மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், மற்றும் சூபிலி மிசன் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்.[5][6]
சீட்டு விலை
[தொகு]2012-ல் நுழைவுச்சீட்டு விலை ரூ.5 ஆக இருந்தது, ஆனால் 2013-ல் அது ரூ.10 ஆகவும், பூரம் அன்று ரூ.15 ஆகவும் உயர்ந்தது. பின்னர் நுழைவுச்சீட்டு கட்டணம் ஒரு நபருக்கு ரூ.35 ஆக உயர்த்தப்பட்டது (4 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முழு நுழைவுச்சீட்டு). 2025-ல் சாதாரண நாட்களில் நுழைவுச்சீட்டு விலை ரூ.40 ஆகவும், பூரத்திற்கு முன்னும், பின்னும், மற்றும் பூரம் நாளிலும் ரூ.50 ஆகவும் இருந்தது. கண்காட்சிக் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 2025-ல் கண்காட்சிக்காக சுமார் 180 அரங்குகள் மற்றும் 70 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு சவாரிகள் மற்றும் உணவுக் கடைகள் உள்ளன. தேவசுவம்கள், திருச்சூர் மாநகராட்சி, கொச்சி தேவசுவம் வாரியம், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அடங்கிய ஒரு குழுவால் இந்தக் கண்காட்சி நிர்வகிக்கப்படுகிறது.[7][8][9][10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pooram exhibition begins". The Hindu (Chennai, India). 2009-04-03 இம் மூலத்தில் இருந்து 2009-04-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090413052059/http://www.hindu.com/2009/04/03/stories/2009040353300300.htm.
- ↑ "Pooram exhibition drawing crowds". The Hindu (Chennai, India). 2011-04-19 இம் மூலத்தில் இருந்து 2011-05-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110502153549/http://www.hindu.com/2011/04/19/stories/2011041950850200.htm.
- ↑ "Thrissur Pooram exhibition". The Hindu (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 2013-02-04 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130204000138/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article1577757.ec.
- ↑ "Thrissur Pooram Exhibition". City Journal. Archived from the original on 2025-12-22. Retrieved 2012-03-31.
- ↑ "Pooram fair to end on May 23". The Hindu. 16 May 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/pooram-fair-to-end-on-may-23/article3427832.ece.
- ↑ "Chiranjeevi to open Thrissur Pooram exhibition today". The New Indian Express. Archived from the original on 4 March 2016. Retrieved 2013-04-07.
- ↑ "Thrissur Pooram exhibition to open today". City Journal. Archived from the original on 2013-07-02. Retrieved 2013-04-07.
- ↑ "Chiranjeevi to open Thrissur Pooram exhibition today". The New Indian Express. Archived from the original on 4 March 2016. Retrieved 2013-04-07.
- ↑ "Pooram fair to end on May 23". The Hindu. 16 May 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/pooram-fair-to-end-on-may-23/article3427832.ece.
- ↑ "Ministers Suresh Gopi, K Rajan inaugurate Thrissur Pooram exhibition". Ministers Suresh Gopi, K Rajan inaugurate Thrissur Pooram exhibition (in ஆங்கிலம்). Retrieved 2025-05-17.
