திருச்சிராப்பள்ளி கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருச்சிராப்பள்ளி கோட்டை
TRICHY FORT GATEWAY.jpg
திருச்சிராப்பள்ளி கோட்டையின் சிதைந்த மதில் சுவர்
அமைவிடம்திருச்சிராப்பள்ளி, இந்தியா
ஆள்கூற்றுகள்10°48′18″N 78°41′06″E / 10.805°N 78.685°E / 10.805; 78.685
கடல் மட்டத்திலிருந்து உயரம்கடல் மட்டத்திலிருந்து 88மீ மேலே
இன்றைய பயன்பாடுஅழிந்து வருகிறது
கட்டிட முறைதிராவிடக் கட்டிடக்கலை (மதுரை நாயக்கர்கள்)
வகைகோட்டை
State Party இந்தியா

திருச்சிராப்பள்ளி கோட்டை (Tiruchirappalli Fort) ஒரு சிதிலமடைந்த கோட்டையாகும். இக்கோட்டை பெரிய கடைத் தெரு, சிங்காரத் தோப்பு, பிஷப் ஹீபர் பள்ளி, தெப்பக்குளம் மற்றும் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ஆகியவற்றை உள்ளிட்ட பழைய திருச்சிராப்பள்ளி நகரைச் சுற்றி வளைத்து அமைந்திருந்த கோட்டையாகும். இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில், இந்தக் கோட்டையின் பெயரில் தற்போது எஞ்சியிருப்பதோ, ஒரு புகைவண்டி நிலையம் மற்றும் மேற்கு பொலிவார்ட் சாலையில் மெயின் கார்ட் கேட் ஆகிய இரண்டு பகுதிகள் மட்டுமே ஆகும்.மேற்கில் மேற்கு பொலிவார்ட் சாலையிலும், கிழக்கில், கிழக்கு பொலிவார்ட் சாலையிலும், வடக்கில் பட்டர்-ஒர்த் சாலை மற்றும் தெற்கே காந்தி சந்தை ஆகிய பகுதிகளில் இந்த கோட்டையின் எஞ்சிய பகுதிகளைக் காணலாம்.

திருச்சிராப்பள்ளி கோட்டை புகைவண்டி நிலையம் மெயின்கார்டு கேட் பகுதியின் எதிரிலும் மற்றும் திருச்சிராப்பள்ளி நகர புகைவண்டி நிலையம் நகரின் கிழக்கு நுழைவு வாயிலிலும் அமைந்துள்ளன.

தென்னிந்தியாவின் காவேரி நதியின் கரையோரமாக, கடலில் இருந்து சுமார் 56 மைல் (90 கிமீ) தொலைவில் திரிச்சினோாபாலி கோட்டையானது, சென்னை மாகாணத்தில் மூன்றாவது மிக முக்கியமான கோட்டை நகராகும் (புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் புனித டேவிட் கோட்டை ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக). செவ்வக வடிவ கோட்டையானது பாறையோடு இணைக்கப்பட்டு கட்டப்பட்டது, இது சமவெளிப் பகுதியிலிருந்து திடீரென எழுந்த இயற்கையான எரிமலை கனிமங்கள் கலந்த அடுக்குப்பாறையால் ஆன குன்றுடன் இந்தக் கோட்டை இணைக்கப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி கோட்டையின் ஆதி வரலாறு[தொகு]

இக்கோட்டையின் பெரும்பகுதி மற்றும் பெரும்பாலான நகர்ப்பகுதி போன்றவை 1559 முதல், மதுரை மன்னர் விசுவநாத நாயக்கர் ஆட்சியில் கட்டப்பட்டது. அவருடைய பேரனான சொக்க நாயக்கர், அதை அரசின் தலைநகராக ஆக்குவதற்கு பொறுப்பாளியாக இருந்தார். பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில், தென் இந்தியாவை கட்டுப்படுத்தும் போராட்டத்தில் பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய படைகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களின் மையப்பகுதியாக இந்த நகரம் இருந்தது. அதே நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் மைசூர் போர்களின் போது இந்த நகரம் அடிக்கடி தாக்குதல்களை சந்தித்தபோது, பலமுறை சூறையாடப்பட்டது.

கோட்டையின் உட்புறத்தின் அமைப்பு[தொகு]

கற்கோட்டையின் தோற்றம்[தொகு]

இந்தப் பாறை உலகின் பழமையான ஆக்கங்களில் ஒன்றாகும். இது 3.8 பில்லியன் ஆண்டுகள் பழமையானது. கிரீன்லாந்தில் உள்ள பாறைகள் மற்றும் இமயமலைக்கு முந்தைய பழங்காலத்தைய பாறையாக அறியப்படுகிறது.[1] கண்ணாடி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் குவார்ட்சு, மற்றும் மட்பாண்டங்களில் பயன்படுத்தப்படும் ஃபெல்ஸ்பார், இந்தப் பாறையின் இயைபில் காணப்படுகின்றன. பூமியின் மிகப்பெரிய ஒற்றைப் பாறையாக இருப்பதால் இது ஒரு விருப்பத்திற்குரிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

கட்டுமானம்[தொகு]

பெயர் குறிப்பிடுவது போல, மலைக்கோட்டை கோயில் 83 மீட்டர் உயரத்திற்கு மேல் அமைந்துள்ளது. பல்லவர்கள் ஆரம்பத்தில் இந்த கோவிலைக் கட்டினார்கள். ஆனால் நாயக்கர்கள் இயற்கையாக வலுவூட்டப்பட்ட நிலையைப் பயன்படுத்தி, மீண்டும் வடிவமைத்தனர். இக்கோயிலை அடைய, பாறையில் வெட்டி எடுக்கப்பட்ட 437 படிகள் மூலமாக மேலே செல்ல வேண்டியுள்ளது.

கோயில் வளாகம்[தொகு]

கோட்டை வளாகத்தினுள் உள்ள இந்த கோயில் வளாகமானது மூன்று கோயில்களின் தொகுப்பாக உள்ளது:

கடவுளர் சிவபெருமானுக்கான மாத்ருபூதேசுவரர் ஆலயமானது பாறையில் புறத்தெறி உருவமாக லிங்க வடிவைக் கொண்டுள்ளது.

குடைவரைக் கோயில்[தொகு]

மலையில் உள்ள கோயில் வளாகத்தில் உள்ள குடைவரைக் கோயிலானது பல்லவர்களின் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. அப்போது இந்த இடம் லலிதாங்குர பல்லவேசுவரம் என பெயரிடப்பட்டுள்ளது. இங்குள்ள பல கல்வெட்டுக்களில் முதலாம் மகேந்திரவர்மனின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. சோழர்கள், விஜயநகரப் பேரரசின் ஆட்சியாளர்கள் மற்றும் மதுரையை ஆண்ட நாயக்கர்கள் ஆகியோரும் இங்கு விரிவான அளவில் தங்களது பங்களிப்புகளைச் செய்துள்ளனர். இரண்டடுக்கு மாடி உயரத்தில் அமைந்துள்ள தாயுமானவர் கோயில் கட்டிடக் கலையின் தலைசிறந்த படைப்பாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Pippa de Bruyn: "Frommer's India", Frommer's, 2010, ISBN 978-0-470-55610-8978-0-470-55610-8