உள்ளடக்கத்துக்குச் செல்

திருச்சானூர் பத்மாவதி கோயில்

ஆள்கூறுகள்: 13°36′28.1″N 79°27′00.4″E / 13.607806°N 79.450111°E / 13.607806; 79.450111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்மாவதி கோயில், திருச்சானூர், திருப்பதி
பத்மாவதி கோயில் கோபுரம், திருச்சானூர், திருப்பதி
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்:சித்தூர்
அமைவு:திருச்சானூர், திருப்பதி
ஏற்றம்:157.23 m (516 அடி)
ஆள்கூறுகள்:13°36′28.1″N 79°27′00.4″E / 13.607806°N 79.450111°E / 13.607806; 79.450111[1]
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தமிழர் கட்டிடக்கலை
கல்வெட்டுகள்:சமஸ்கிருதம் மற்றும் தமிழ் தெலுங்கு மற்றும் கன்னடக் கல்வெட்டுகள்
வரலாறு
கோயில் அறக்கட்டளை:திருமலை திருப்பதி தேவஸ்தானம்
இணையதளம்:http://www.tirumala.org/ tirumala.org
பத்மாவதி கோயிலின் பத்ம தீர்த்தக் குளம்

திருச்சானூர் பத்மாவதி கோயில் (Padmavathi Temple) அல்லது அலர்மேல் மங்கை கோயில் என்பது மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரமான வெங்கடாசலபதியின் துணைவியான பத்மாவதி தேவி எனும் அலர்மேல் மங்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும்.[1][2] இக்கோயிலின் மூலவர் பத்மாவதி தாயார் எனும் அலர்மேல் மங்கை ஆவார். இக்கோயில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதிக்கு அருகே 4 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சானூரில் உள்ளது.[3] இக்கோயில் நிர்வாகம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் உள்ளது. இக்கோயிலின் கட்டிடம், தமிழரஂ கட்டிடக்கலையில் கட்டப்பட்டது. இக்கோயிலில் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னடக் கல்வெட்டுகள் உள்ளது. இக்கோயிலின் புண்ணிய தீர்த்த குளத்திற்கு பத்மாவதி தீர்த்தக் குளம் என்பர். இக்கோயிலின் முக்கிய திருவிழாக்கள் பத்மாவதி தீர்த்தப் பிரம்மோற்சவம்[4] மற்றும் வரலட்சுமி விரதம் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tirumala Tirupati Devasthanams (Official Website)". www.tirumala.org (in ஆங்கிலம்). Archived from the original on 2024-11-29. Retrieved 2025-01-31.
  2. "திருச்சானூர் பத்மாவதி தாயார்". Archived from the original on 2023-03-18. Retrieved 2023-03-18.
  3. திருச்சானூரில் மட்டும் பத்மாவதி தாயார் தனித்து கோவில் கொண்டிருப்பது ஏன்?
  4. "2 Lakh Take Holy Dip on 'Panchami Theertham'". Retrieved 2015-06-07.

வெளி இணைப்புகள்

[தொகு]