திருச்சம்பரம் கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திரிச்சம்பரம் கல்வெட்டு என்பது 11 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஆகும் [1] வட கேரளாவின் தளிபறம்பா அருகே அமைந்துள்ள திருச்சம்பரம் கோவிலின் மூலவர் கருவறை அடித்தளத்தில் உள்ள இரண்டு கருங்கல் [தெளிவுபடுத்துக] தொகுதிகளில் (ஒரு பக்கத்தில் எழுதப்பட்ட) வட்டெழுத்து எழுத்துக்களில் (சில கிரந்த எழுத்துக்களுடன்) பழைய மலையாளக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.[1]

  • ஏரநாட்டின் தலைவனான மனவேபால மணவியாடன் "திருச்சம்பரம் கோயிலில்" திருவிளக்கு எரிப்பதற்காக அறக்கொடை வழங்கியதை இக்கல்வெட்டு பதிவு செய்கிறது.[1]
  • கபாலி நாராயணன் பட்டவிஜயன் ஆகிய பெயர்களைக் குறிப்பிடுகிறது. நிலம் மற்றும் வாரந்தோறும் திருக்கோவிலில் விளக்கெரிப்பதற்கு எண்ணெய் வழங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் பதிவு செய்துள்ளது.[1]
  • மனவேபால மணவியாடன் என்பது மத்திய கேரளாவில் உள்ள ஏரநாட்டின் தலைவனின் பரம்பரைப் பட்டமாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Narayanan, M. G. S. 2013. 'Index to Chera Inscriptions', in Perumāḷs of Kerala, M. G. S Narayanan, pp. 486–87. Thrissur (Kerala): CosmoBooks.