திருக்கோவலூர்ப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருக்கோவலூர்ப் போர் என்ற போர் சங்ககாலத்தில் அதியமான் நெடுமான் அஞ்சிக்கும், மலையமான் திருமுடிக்காரிக்கும் இடையில் நடந்த போராகும். குலமரபுப் போராக இதைக் கருதலாம். தகடூரில் இருந்து தமிழகத்தின் உட்பகுதிக்குச் செல்லும் ஒரு பெருவழியில் திருக்கோவலூர் அமைந்துள்ளது. எனவே வணிகவழியினைக் கைப்பற்றும் காரணமாகவே இப்போர் நிகழ்ந்திருக்கலாம். இப்போரில் திருமுடிக்காரியின் திருக்கோவலூர் துகளாக்கப்பட்டது. இவ்வெற்றியினை ஔவையார் பெரிதும் புகழ்ந்து பாடியுள்ளார்.

..... .... ..... ...... இன்றும்
பரணன் பாடினன் மற்கொல் மற்றுநீ
முரண்மிகு கோவலூர் நூறி நின்
அரண்அடு திகிரி ஏந்திய தோளே
[1]

இப்பாடலில் குறிப்பிடப்படும் பரணர் பாடிய பாடல் சங்கத் தொகுப்பில் இல்லை. [2]

குறிப்பு[தொகு]

  1. புறநானூறு,ஔவையார் பாடல் எண்.99
  2. இரா.இராமகிருட்டிணன்,தகடூர் வரலாறும் பண்பாடும்,பக்104.105.