திருக்கூர் மகாதேவர் கோவில்
திரிக்கூர் மகாதேவா கோயில் என்பது கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள திரிக்கூர் கிராமத்தில் உள்ள பாறையில் செதுக்கப்பட்ட குகைக் கோயிலாகும், இது 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. குகைக் கோவில் என்பதால், பௌத்த மற்றும் ஜைனத் துறவிகள் இந்து துறவிகளுடன் இணைந்து தியானம் செய்ய இந்தக் தளத்தைப் பயன்படுத்தியிருக்கலாம். இது 1966 ஆம் ஆண்டு முதல் கேரள அரசின் தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் நினைவுச்சின்னமாகும். கோயில் மற்றும் அதன் வளாகம் இப்போது க்ஷேத்ர சம்ரக்ஷனா சமிதி (கோயில் பாதுகாப்புக் குழு) மூலம் நிர்வகிக்கப்படும் பாளையம் அறக்கட்டளைக்கு சொந்தமானது. [1]
இக்கோயிலின் மூலவர் சிவபெருமான் என்னும் மகாதேவர். பெயருக்கு ஏற்றார் போல. இங்குள்ள பிரம்மாண்டமான சிவலிங்கம் அக்னி பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. இதனால், அக்னி பகவான் எப்போதும் சிவபெருமானை வழிபடுவதாகவும், அவர் அவருடன் இணைந்து வருவதாகவும் நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையின் காரணமாக, மழை நாட்களில் சிலை ஊர்வலங்களுக்காக வெளியில் கொண்டு செல்லப்படுவதில்லை.
மலையின் உச்சியில் 30 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்ட இயற்கைக் குகைக்குள் இக்கோவில் அமைந்துள்ளது. குகையின் தெற்கு முனையில் பிரமாண்டமான சிவலிங்கம் உள்ளது. இதற்கு மேலே கோடைக்காலத்தில் அதிக வெப்பமான நாட்களில் கூட வறண்டு போகாத நீர்நிலை உள்ளது. சிவலிங்கம் கிழக்கு நோக்கி காணப்படுகிறது. ஆனால் கருவறையின் கதவு வடக்கு நோக்கி உள்ளது. இலிங்கம் மையத்தில், ஒரு செவ்வக பீடத்தின் மேல் நிறுவப்பட்டுள்ளது. பாறையின் உச்சியில் குளம் ஒன்றும் உள்ளது. 1966 ஆம் ஆண்டு முதல், இக்கோயில் தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக உள்ளது.
கட்டிடக்கலை
[தொகு]கோயிலின் கருவறை 12 அடி நீளமும் 8 அடி அகலமும் கொண்ட குகைக்குள் அமைந்துள்ளது. கருவறைக்கு எதிரே ஒரு முக மண்டபம் உள்ளது, முழுக்க முழுக்க பாறையில் அழகிய கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. தரிசனத்தின் போது தெய்வம் கிழக்கு பார்த்தாலும், பக்தர்கள் லிங்கத்தின் வலது பக்கம் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் . (“பார்ஷ்வ தர்ஷன்”. ) [2]
பார்வதி தேவி இங்கு ஞானத்தின் உருவாய் நின்று அருள் பாலிக்கிறாள். கருவறையின் மேற்கு நோக்கிய குகையின் சுவரில் கணபதியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. [2] பாறைகள் நிறைந்த மண் மற்றும் 16 தூண்களால் கட்டப்பட்ட நமஸ்கார மண்டபம், ஏராளமான அழகிய சிற்பங்களைக் காட்சிப்படுத்துகின்றன. கோயிலின் வடக்கே உள்ள மண்டபத்தில் சரஸ்வதி பூஜை மற்றும் சாக்கியர் கூத்து முறையே நவராத்திரி மற்றும் பல சமய நிகழ்வுகளின் போது நடைபெறுவதுண்டு.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dept of Archaeology, Govt of Kerala : Monuments at a Glance "Archived copy". Archived from the original on 2004-12-22. பார்க்கப்பட்ட நாள் 2014-02-24.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) (Retrieved on 17 February 2009) - ↑ 2.0 2.1 "Trikkur Mahadeva Temple Timings, History, Poojas and Festivals -". Temples In India Info (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-04-18. பார்க்கப்பட்ட நாள் 2022-01-21."Trikkur Mahadeva Temple Timings, History, Poojas and Festivals -". Temples In India Info. 18 April 2019. Retrieved 21 January 2022.