திருக்குறள் (விளக்கப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருக்குறள் (விளக்கப்படம்)

திருக்குறள்
நூல் பெயர்:திருக்குறள்
வகை:விளக்கப்படம்
துறை:{{{பொருள்}}}
இடம்:மனுஜோதி ஆசிரமம் ,
சத்திய நகரம்,
ஓடை மறிச்சான் அஞ்சல்,
பாப்பாக்குடி- 627 602
திருநெல்வேலி மாவட்டம் ,
தமிழ்நாடு
மொழி:தமிழ்
பதிப்பகர்:மனுஜோதி ஆசிரமம்
ஆக்க அனுமதி:மனுஜோதி ஆசிரமத்துக்கு

உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளுக்கு திருநெல்வேலி மாவட்டம் , முக்கூடல் அருகில் உள்ள மனுஜோதி ஆசிரமம் ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் இந்துக்களின் புனித நூலான கருதப்படும் பகவத்கீதை , கிறித்துவர்களின் புனித நூலான பைபிள் , இசுலாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆன் போன்றவற்றில் சொல்லப்பட்ட கருத்துக்களை உள்ளடக்கி ஒரு புதிய ஆன்மீகக் கண்ணோட்டத்திலும் இலக்கியக் கண்ணோட்டத்திலும் சொல்லிய விளக்கங்கள், விளக்கப்படமாக இலவசமாய் வழங்கும்படியாக வெளியிடப்பட்டுள்ளது.

படக்குழு[தொகு]

  1. தயாரிப்பு - தேவாசீர் இ.லாறி.
  2. எழுத்து இயக்கம் - ஞானசூரியன்
  3. தயாரிப்பு மேற்பார்வை - தே.உப்பாஸ் ராஜா
  4. இணை தயாரிப்பு - தே.லியோ ராஜா
  5. இணை இயக்கம் - பி.லாசர்
  6. ஒலிப்பதிவு -எல்.ராஜ்
  7. படத்தொகுப்பு - வி.முத்துக்கிருஷ்ணன்
  8. படத்தொகுப்பு உதவி - ஏ.டால்டன்
  9. பின்னனிக் குரல்கள் - எல்.விஜயா மற்றும் ஆர்.வேங்கடபதி

பொருளடக்கம்[தொகு]

இந்தப் படத்தில் முதலில் சென்னை மயிலாப்பூர் பகுதியிலுள்ள திருவள்ளுவர் திருக்கோவில் , சென்னையிலுள்ள திருவள்ளுவர் கோட்டம் மற்றும் கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவர் சிலை , மதுரை மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரைக் குளம் போன்ற காட்சிப் படங்கள் காண்பிக்கப்படுகின்றன. திருவள்ளுவர் கோவிலில் திருவள்ளுவர் மூலவராகவும், வலது புறம் வாசுகி அம்மையாருக்கும் இடது புறம் மாரியம்மனுக்கும் தனியாகவும் சன்னதிகள் உள்ளன. மேலும் வல்லப விநாயகர், ஏகாம்பரேஷ்வர், காமாட்சியம்மன், ஆஞ்சநேயர், காலபைரவர், சனீஸ்வரர் மற்றும் பல உப தெய்வங்களுக்கும் இங்கு சிலைகள் அமைக்கப்பட்டிருப்பது காண்பிக்கப்படுகின்றது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மலேயாப் பல்கலைக்கழகத் துங்கு வேந்தர் மண்டபத்தில் நடைபெற்ற முதலாவது உலகத் தமிழ்மறை ஆராய்ச்சி மாநாட்டுக் காட்சிகள், மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற பன்னாட்டுத் தமிழறிஞர்களுக்கான விமான நிலைய வரவேற்பு நிகழ்ச்சி முதல் மாநாட்டில் நடைபெற்ற திருவள்ளுவர் மேடை நாடகம், பன்னாட்டுத் தமிழறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள், தமிழ்க் கலை விழா, பாராட்டு நிகழ்வுகள் என்று மூன்று நாட்கள் நடந்த நிகழ்ச்சிகளில் சில முக்கியக் காட்சிப் படங்களை இங்கு தொகுத்து அளித்திருக்கின்றார்கள்.

இந்தக் காட்சிகளின் பின்னணியில் மாநாட்டுத் தகவல்களும், இடையிடையே ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் சொற்பொழிவாற்றிய பல உரைகளில் தெரிவித்த கருத்துக்களில் சில திருக்குறளுக்கு அவர் அளித்த இந்து மதம், கிறித்துவமதம், இசுலாமிய மதம் போன்றவற்றில் சொல்லப்பட்ட விடயங்களும் சொல்லப்பட்டிருக்கின்றது.

இலவசமாய்ப் பெற[தொகு]

திருக்குறள் (விளக்கப்படம்) வேண்டி மனுஜோதி ஆசிரமம் முகவரிக்கு தபால் அனுப்பி இலவசமாய்ப் பெற்றிடலாம்.

வெளி இணைப்புகள்[தொகு]