திருக்குருகைப் பெருமாள் கவிராயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருக்குருகைப் பெருமாள் கவிராயர் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்மாழ்வார் பிறந்த ஆழ்வார்திருநகரி என்னும் ஊரில் பிறந்தவர். நம்மாழ்வாரை 'வேதம் தமிழ்ப்படுத்த மாறன்' எனப் போற்றுவது வழக்கம். இந்த முறையில் இந்த மாறன் பெயரில் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் சில நூல்களை இயற்றியுள்ளார்.

  1. மாறன் அலங்காரம் [1], (அணி)
  2. மாறன் அகப்பொருள் [2],(பொருள்)
  3. மாறன் பாப்பாவினம்,(யாப்பு)

என்னும் இலக்கண நூல்களும்,

  1. திருக்குருகை மான்மியம் என்னும் இலக்கியமும் இவரால் செய்யப்பட்டவை. [3]
  2. நம்பெருமாள் மும்மணிக்கோவை என்னும் சிற்றிலக்கியமும் (நம்பெருமாள் என்பது திருவரங்கப் பெருமான்) இவரால் பாடப்பட்டுள்ளது. [4]

குருகைப்பிரான் என்னும் பெயர் நம்மாழ்வாரைக் குறிக்கும். இவரது குருகைப் பெருமாள் என்னும் பெயர் குருகைப்பிரான் என்னும் பெயரோடு தொடர்புடையது.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. சமணர் செய்த நூல் தண்டியலங்காரம்
  2. சமணர் செய்த நூல் நம்பி அகப்பொருள்
  3. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 275. 
  4. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 79.