திருக்குருகாவூர் வெள்ளடைநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
திருக்குருகாவூர் வெள்ளடைநாதர் கோயில்
பெயர்
தேவநாகரி:திருக்குருகாவூர்
அமைவிடம்
ஊர்:திருக்கடாவூர்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சுவேதரிஷபேஸ்வரர், வெள்ளடையீஸ்வரர், வெள்ளடைநாதர்[1]
தாயார்:நீலோத்பல விசாலாட்சி, காவியங்கண்ணி
தீர்த்தம்:பால் கிணறு
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர், சுந்தரர்

அமைவிடம்[தொகு]

இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. தென்திருமுல்லைவாயிலிலிருந்து எளிதில் செல்லலாம். சீர்காழி-திருமுல்லைவாயில் பாதையில் 6 கிமீ சென்று வடகால் என்னும் ஊரில் பிரியும் வழியில் சென்றும் இத்தலத்தை அடையலாம்.மக்கள் வழக்கில் திருக்கடாவூர் என்றழைக்கப்படுகிறது.

வெள்ளடைநாதர் கோயில் சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற தலமாகும். இத்தலத்தின் தலவிருட்சம் வில்வம், பால்கிணறு தீர்த்தமும் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் இது 13வது சிவத்தலமாகும்.

இறைவன்,இறைவி[தொகு]

இத்தலத்தின் இறைவன் வெள்ளடைநாதர், இறைவி காவியங்கண்ணி.

பொதிசோறு வழங்கும் விழா[தொகு]

சுந்தரருக்கு பொதி சோறு வழங்கும் விழா இத்தலத்தின் சிறப்பாகும். வெயிலின் காரணமாகவும், தண்ணீரின் தாகத்துடனும், பசியாலும் வந்த சுந்தரருக்கும், அவருடன் வந்த அடியார்களுக்கும் சிவபெருமான், வேதியர் வடிவில் தோன்றி, பெரிய பந்தல் ஏற்பாடு செய்து அவர்களை களைப்பாறச் செய்ததோடு, சுவையான குளிர்ந்த நீரையும், பசி தீர பொதி சோற்றினையும் தந்தருளினார். இதனை நினைவுகூரும் வகையில் இக்கோயிலில் சுந்தரருக்கு பொதிசோறு வழங்கும் விழா ஒவ்வோராண்டும் நடைபெறுகிறது. அப்போது பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. தொடர்ந்து மூலவருக்கும், சுந்தரருக்கும் சிறப்புப்பூசைகள் செய்யப்படுகின்றன. [2] இவ்விழாவினை கட்டமது படைப்பு விழா என்றும் கூறுவர். [3] நாவுக்கரசருக்கு இறைவன் பொதிசோற்றினை திருப்பைஞ்ஞீலி கோயிலில் கொடுத்தார்.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்