திருக்குப்பம் - 15
| திருக்குப்பம் - 15 TKM 15 |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| திருக்குப்பம் - 12 X IET 21620 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 118 நாட்கள் |
| மகசூல் |
| 3995 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 2022[1] |
| வெளியீட்டு நிறுவனம் |
| TNAU, RRS, திரூர், திருக்குப்பம் |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
திருக்குப்பம் - 15 (TKM 15), சுட்டுப்பெயர்: (TM 12077), முன்மொழிவு எண்: (IET 26645) எனப்படும் இந்த நெல் வகை, திருக்குப்பம் - 12 மற்றும் IET 21620 நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[2]
காலம்
[தொகு]செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் (இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் பொருத்தமான மானாவாரிப் பகுதிகளுக்கு பயிரிட ஏற்றதாக கூறப்படும் இந்த நெல் இரகம், 118 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது.[2] சம்பா மற்றும் பின் சம்பா போன்ற குறுகிய காலப் பருவங்களில் பயிரிடப்கிறது.[1]
மகசூல்
[தொகு]தண்டு துளைப்பான், இலை மடிப்பு, பித்தப்பை பூச்சி, வெடிப்பு, உறை அழுகல், உறை கருகல் மற்றும் பழுப்பு புள்ளி, ஆகியவற்றை தாங்கும் திறன் கொண்ட இது, உலர்ந்த நிலையில் ஒரு எக்டேருக்கு சராசரியாக 3995 (அரை உலர்ந்த நிலையில் 4217) கிலோ வரை உற்பத்தித் திறன் கொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.[2] மேலும் நடுத்தர மெல்லிய தானியமும், வெள்ளை அரிசியுமான இந்நெல் வகை, அதிக அரைத்தல் (68%) மற்றும் தலை நெல் மீட்பு (62.9%) கொண்டது என கருதப்படுகிறது.[1]
வெளியீடு
[தொகு]இந்த நெல் இரகத்தை, TNAU கீழ் இயங்கிவரும், திருவள்ளூர் மாவட்டத்தின் திரூர், திருக்குப்பம் எனும் பகுதியில் அமைந்துள்ள RRS, 2022 ஆம் ஆண்டு வெளியிட்டது.[1]
சாகுபடி
[தொகு]வறட்சியைத் தாங்கி வளரும் நெல் இரகமான திரூர் - 15 அறிமுகப்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வயலில் கள செயல்விளக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் 2023 இல் சம்பா சாகுபடி பருவத்தில், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் உள்ள "கிருதி விஞ்ஞான் கேந்திராவால்" ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகளின் வயல்களில் மொத்தம் பத்து கள செயல்விளக்கங்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[3]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Varieties Released". tnau.ac.in (ஆங்கிலம்) - © 2023. Retrieved 2025-07-04.
- ↑ 2.0 2.1 2.2 "Season and Varieties - Rice TKM 15". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - © TNAU 2008 - 2023. Retrieved 2025-07-04.
- ↑ "Impact of Varietal Demonstrations on the Productivity and Sustainability in Rice (Oryza sativa L.) at Villupuram District of Tamil Nadu, India". journalarja.com (ஆங்கிலம்) - © 2025. Retrieved 2025-07-04.