திருக்களம்பூர்
திருக்களம்பூர் | |
|---|---|
திருக்களம்பூர், புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 10°12′20″N 78°29′47″E / 10.2055°N 78.4965°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| ஏற்றம் | 151.03 m (495.51 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 622403 |
| புறநகர்ப் பகுதிகள் | நெற்குப்பை, சிறுமருதூர், தெக்கூர் |
| மக்களவைத் தொகுதி | சிவகங்கை |
| சட்டமன்றத் தொகுதி | திருமயம் |
திருக்களம்பூர் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பொன்னமராவதி நகருக்கு அருகிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3] வீரபாண்டிய கட்டபொம்மன், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கயத்தாறு நகருக்கு அருகிலுள்ள பாஞ்சாலங்குறிச்சியில் தூக்கிலிடப்படுவதற்கு முன் திருக்களம்பூர் பகுதியில் மறைந்திருந்ததாகவும், இங்குதான் அவர் ஆங்கிலேயர்களிடம் காட்டிக் கொடுக்கப்பட்டு, சிறைப்பிடிக்கப்பட்டதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.[4][5][6]
அமைவிடம்
[தொகு]திருக்களம்பூர், கடல் மட்டத்திலிருந்து சுமார் 151.03 மீ. உயரத்தில், (10°12′20″N 78°29′47″E / 10.2055°N 78.4965°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்ட பகுதியில் அமைந்துள்ளது.
சமயம்
[தொகு]இந்துக் கோயில்கள்
[தொகு]கதலிவனேசுவரர் கோயில், கொடியேரியம்மன் கோயில் மற்றும் கருப்பக்குடிபட்டி அய்யனார் கோயில் ஆகிய இந்துக் கோயில்கள் திருக்களம்பூர் நகரில் அமைந்துள்ளன. இக்கோயில்கள் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ மு. ஹரி காமராஜ் (2023-01-02). "அதிசய வாழைகள்... நான்கு பிரார்த்தனைகள்!". www.vikatan.com/. Retrieved 2025-05-28.
- ↑ Pudukkottai Maavatta Aalayangal- The Temples of Pudukkottai district- A Pilgrimage guide in Tamil. Bharathi Puthakalayam.
- ↑ Tamil Nadu (India) Legislature Legislative Assembly (1984). Madras Legislative Assembly debates; official report. Legislative Assembly.
- ↑ எம். வி வெங்கட்ராம் (2007). வீரபாண்டிய கட்டபொம்மன்: நாட்டுக்கு உழைத்த நல்லவர். Pal̲an̲iyappā Piratars. ISBN 978-81-8379-215-8.
- ↑ R.V.Pathy (2025-02-11). Veerapandiya Kattabomman. Pustaka Digital Media.
- ↑ Jaya Venkatraman (2018-01-01). Kan Kavarum Kalai Koyilgal. Pustaka Digital Media. ISBN 978-93-5285-156-0.