திருக்கருக்காவூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருக்கருக்காவூர் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாபநாசம் தாலுக்காவின் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1]

அமைவிடம்[தொகு]

திருக்கருக்காவூர் மாவட்ட தலைநகரான தஞ்சாவூரில் இருந்து 19 கிலோ மீட்டர் கிழக்கே அமைந்துள்ளது, ஊராட்சி ஒன்றியமான அம்மாபேட்டையில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மக்கள்தொகை[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமம் 474 வீடுகளும், 1872 மக்கள்தொகையும் கொண்டுள்ளது. இதில் 932 ஆண்களும் 940 பென்களும் அடங்குவர்.[2] இந்த ஊரின் கல்வியறிவு விகிதம் 71.8 % ஆகும்.[2] இங்கு பட்டியல் இனத்தவர்கள் 36.86% ஆக உள்ளது, இந்த பட்டியல் இனத்தவர்கள் மக்கள் தொகை 690 ஆகும். திருக்கருக்காவூரின் பாலின விகிதம் 1009 ஆக உள்ளது.

முக்கிய தலங்கள்[தொகு]

திருக்கருக்காவூரில் புகழ்பெற்ற கர்ப்பரட்சாம்பிகை கோவில் உள்ளது.ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காப்பாற்றிய தலம் இது.[3] திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்பெறும் இந்த தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது. தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்களில் திருக்கருக்காவூரும் ஒன்று.[4]

போக்குவரத்து[தொகு]

திருக்கருக்காவூருக்கு அருகாமையில் உள்ள தொடர்வண்டி நிலையமான பாபநாசம் தொடர்வண்டி நிலையம். இது இவ்வூரில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. [5][6]

இவற்றையும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்கருக்காவூர்&oldid=2761298" இருந்து மீள்விக்கப்பட்டது