உள்ளடக்கத்துக்குச் செல்

ஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருஓணகாந்தன்தளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
ஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் கோயில்[1]
பெயர்
புராண பெயர்(கள்):திருவோணகாந்தன்தளி
பெயர்:ஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் கோயில்[1]
அமைவிடம்
ஊர்:ஓணகாந்தன்தளி,பஞ்சுப்பேட்டை
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஓணகாந்தேஸ்வரர்
தாயார்:காமாட்சி
தல விருட்சம்:வன்னி, புளியமரம்
தீர்த்தம்:ஓணகாந்த தீர்த்தம், தான் தோன்றி தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சுந்தரர்
வரலாறு
தொன்மை:புராதனக்கோயில்

ஓணகாந்தன்தளி - ஓணேஸ்வரர் காந்தேஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயம்.பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [2]

அமைவிடம்

[தொகு]

இத்திருக்கோயில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு மேற்கேயுள்ள சர்வதீர்த்தத்துக்கு வடமேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் பஞ்சுப்பேட்டை என்ற பகுதியில் உள்ள துணை நிலையத்திற்கு எதிரில் கோவில் உள்ளது. சாலையோரத்திலேயே கோவிலும் மின் நிலையமும் அமைந்துள்ளது. இங்கு சுந்தரர் பதிகம் பாடி இறைவனிடமிருந்து புளியங்காய்களை பொன்காய்களாகப் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

அமைப்பு

[தொகு]

வாணாசுரனுடைய சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்னும் இருவர் வழிபட்ட இத்தலத்தில் இவ்விருவரும் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும் அடுத்தடுத்து தனிச் சன்னதிகளாக உள்ளன. சலந்தரன் வழிபட்டதாகச் சொல்லப்படும் சலேந்தரேஸ்வரர் சிவலிங்கத்திருமேனி தனியே உள்ளது. [2] இவ்வகையில் ஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் கோயில் வளாகத்தில் மூன்று சிவலிங்கத் திருமேனிகளை மூலவராகக் கொண்ட மூன்று சன்னதிகள் உள்ளன. அவை ஒரே நுழைவாயிலைக் கொண்டு அமைந்துள்ளன.

ஓணகாந்தேஸ்வரர்

[தொகு]

ஓணகாந்தேஸ்வரர் (ஓணேஸ்வரர்) சன்னதியின் கோஷ்டத்தில் பாலவிநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். முன்புறத்தில் பலி பீடம் மற்றும் நந்தி உள்ளன. இங்கு வயிறுதாரி விநாயகர், குமார வேலன், பைரவர், சூரியன் நவக்கிரகம், அகோர வீரபத்திரர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.

காந்தேஸ்வரர்

[தொகு]

காந்தேஸ்வரர் சன்னதியின் வலது புறத்தில் ஓம்கார கணபதி, இடது புறத்தில் சுப்ரமணியர் ஆகியோர் உள்ளனர். முன்புறம் நந்தி மண்டபம் உள்ளது.

சலந்தரேஸ்வரர்

[தொகு]

சலந்தரேஸ்வரர் சன்னதிக்கு மேற்கண்ட இரு சன்னதிகளின் வலது புறத்தில் உள்ள திருச்சுற்றில் உள்ள வாயில் வழியாகச் செல்ல வேண்டும். வெளியிலிருந்து நேரடியாக உள்ளே வரமுடியாது. சலந்தரேஸ்வரர் சன்னதியின் திருச்சுற்றில் கணபதி சன்னதி, சுப்ரமணியர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. முன் புறத்தில் பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன.

சிறப்பு

[தொகு]

இத்திருக்கோயிலின் அர்த்த மண்டபத்தில் சுந்தரர் மற்றும் சிவபெருமானாரின் திருப்பாதம் உள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 http://temple.dinamalar.com/New.php?id=180
  2. 2.0 2.1 பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

இவற்றையும் பார்க்க

[தொகு]

படத்தொகுப்பு

[தொகு]