அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருஅச்சிறுப்பாக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சந்நிதி 1[1]
பெயர்
புராண பெயர்(கள்): அச்சிறுபாக்கம்
பெயர்: சந்நிதி 1[1]
அமைவிடம்
ஊர்: அச்சரப்பாக்கம்
மாவட்டம்: காஞ்சிபுரம்
மாநிலம்: தமிழ்நாடு
நாடு:  இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: உமையாட்சீசர்
தாயார்: சுந்தரநாயகி, பாலாம்பிகை, இளங்கிளியம்மை
வரலாறு
தொன்மை: புராதனக்கோயில்
சந்நிதி 2 [1]
பெயர்
புராண பெயர்(கள்): அச்சிறுபாக்கம்
பெயர்: சந்நிதி 2 [1]
அமைவிடம்
ஊர்: அச்சரப்பாக்கம்
மாவட்டம்: காஞ்சிபுரம்
மாநிலம்: தமிழ்நாடு
நாடு:  இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: உமையாட்சீசர்
தாயார்: மெல்லியலாள்
தல விருட்சம்: சரக்கொன்றை
தீர்த்தம்: சங்கு தீர்த்தம், பானு தீர்த்தம், தேவ தீர்த்தம், சிம்ம தீர்த்தம்.
வரலாறு
தொன்மை: புராதனக்கோயில்

அச்சரப்பாக்கம் ஆட்சீசுவரர் கோயில் திருஞான சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவத்தலமாகும். மூலவர் ஆட்சீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியாக காட்சியளிக்கிறார். இத்தலத்தில் சங்கு தீர்த்தம், சிம்ம தீர்த்தம் என இரு தீர்த்தங்கள் உள்ளன.

இரண்டு சந்நிதிகள் இத்திருத்தலத்தில் உள்ளன.கண்ணுவ முனிவர், கௌதம முனிவர் வழிபட்ட திருத்தலம்.[1]

தல புராணம்[தொகு]

திரிபுரம் எரிக்க சிவபெருமான் செல்லும் பொழுது தேர் அச்சு முறிந்தது. இதற்கு கணபதியிடம் விடை பெறாததே காரணம் என்று கணபதிக்கு ஆசி வழங்கிய தலம் இதுவாகும். அச்சு + இறு + பாக்கம் - அச்சிறுபாக்கம் என்பது மருவி அச்சரப்பாக்கம் என தற்போழுது வழங்கப்பெறுகிறது.

அகழ்வாராய்ச்சிகள்[தொகு]

இங்கு இடம்பெற்ற பல்வேறு தரப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டின் தொண்டை மண்டலப் பிரதேசத்தில் 6 ஆம் 7 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இப்பாத்திரங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது. இத்தொண்டை மண்டலப் பிரதேசம் சங்க காலத்தில் பல்லவர்களின் அரசியல் செல்வாக்கு தழைத்தோங்கிய பிரதேசமாகக் காணப்படுகின்றது.[2]

போக்குவரத்து[தொகு]

திருச்சி-சென்னை அதிவேக பாதையில் 79 ஆவது கிலோமீற்றர் தொலைவில் அச்சிறுபாக்கம் அமைந்துள்ளது.
திருச்சி-சென்னை உடனான பகையிரதப் பாதையில் அச்சிறுபாக்கமே தலைமையகமாகும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 58,59
  2. Kalpavṛkṣa: essays on art, architecture and archaeology.D. Dayalan

வெளி இணைப்புகள்[தொகு]