திரிவேணி ஆச்சார்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரிவேணி ஆச்சார்யா
தேசியம் இந்தியா
அமைப்பு(கள்)மீட்பு அறக்கட்டளை
விருதுகள்ஆசிய ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் விருது (2010)
துணிச்சல் விருது (2011)
குழந்தைகள் உலக மனிதாபிமான விருது (2013)

திரிவேணி ஆச்சார்யா (Triveni Acharya) மும்பையில் வசிக்கும் ஒரு இந்தியப் பத்திரிகையாளரும், சமூக ஆர்வலரும் ஆவார். இவர் பாலியல் கடத்தல் எதிர்ப்பு குழுவான "மீட்பு அறக்கட்டளை"யுடன் பணியாற்றியதற்காக மிகவும் பிரபலமானார்.

பணிகள்[தொகு]

மீட்பு அறக்கட்டளையானது தனது கணவர் பால்கிருஷ்ணா ஆச்சார்யாவால் நிறுவப்பட்டது. ஆனால் 2005இல் ஒரு கார் விபத்தில் தனது கணவர் இறந்ததைத் தொடர்ந்து அதன் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார்.[1] இந்த அமைப்பு இந்தியா, நேபாளம் மற்றும் வங்காளதேசத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, மறுவாழ்வு அளித்தல் மற்றும் திருப்பி அனுப்புதல் மற்றும் கட்டாய விபச்சாரத்திற்காக விற்கப்படுவதை தடுத்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.[2] and has been conducting "brothel raids" since 1993.[3] 1993 முதல் "விபச்சாரச் சோதனைகளையும்" நடத்தி வருகிறது. இந்த அமைப்பு ஆண்டுக்கு சுமார் 300 சிறுமிகளை விடுவிக்கிறது. மேலும் ஆலோசனை, வேலை பயிற்சி மற்றும் எச்.ஐ.வி பரிசோதனையையும் வழங்குகிறது.[4] இந்த சோதனைகளால் பாலியல் கடத்தல்காரர்களுக்கு பெரும்பாலும் கடுமையான நிதி இழப்பும் சிறைவாசமும் ஏற்படுவதால், இவர் பல மரண அச்சுறுத்தல்களைப் பெற்றுள்ளார்.[5]

விருதுகள்[தொகு]

இவரது தலைமையில் அதன் பணிக்காக மீட்பு அறக்கட்டளை பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது. 2008ஆம் ஆண்டில், இந்த குழு பெண்கள் தொழில்முனைவோருக்கான நாரி சக்தி விருது|நாரி சக்தி விருதைப் பெற்றது.[6] தைவான் அதிபர் மா யிங்-ஜியோ இவருக்கு தைவான் ஜனநாயக அறக்கட்டளையின் ஆசிய ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான விருதையும், 100,000 அமெரிக்க டாலர் ரொக்க மானியத்தையும் வழங்கினார்.[4] கடத்தலால பாதிக்கப்பட்டு அறக்கட்டளையால் காப்பாற்றப்பட்ட ஒருவரால் இந்த அமைப்பு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.[7] 2011 ஆம் ஆண்டில், ஆச்சார்யா தி டிரைன் அறக்கட்டளையின் தைரியப் பரிசை வென்றார். இது "தீமையை உறுதியாக எதிர்த்துப் போராடுபவர்களுக்கு" ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.[8] "பாலியல் கடத்தல், வீட்டு வன்முறை மற்றும் சிறுவர் ஆபாச படங்களுக்கு" எதிரான தனது முயற்சிகளுக்காக வழங்கப்பட்ட மெக்சிக்கோ பத்திரிகையாளரான லிடியா கச்சோ ரிபேரோவுடன் இவர் பரிசைப் பகிர்ந்து கொண்டார்.[9] 2013ஆம் ஆண்டில், மீட்பு அறக்கட்டளையுடனான தனது பணியுடன் இணைந்து 2013 ஆம் ஆண்டின் மனிதநேய மரியாதைக்குரிய உலக விருது பெற்றார்.[10] அங்கீகாரத்துடன் 75,000 டாலர் ரொக்க மானியமும் கிடைத்தது.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "About Us". Rescue Foundation. Archived from the original on 1 ஆகஸ்ட் 2009. பார்க்கப்பட்ட நாள் 15 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Welcome to Rescue Foundation". Rescue Foundation. Archived from the original on 30 சனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2012.
  3. Mallika Kapur (2011). "Bound cruelly to their work". The Hindu Business Line. http://www.thehindubusinessline.com/features/life/article2656540.ece. பார்த்த நாள்: 15 January 2012. 
  4. 4.0 4.1 "Indian NGO wins accolades". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 10 December 2010 இம் மூலத்தில் இருந்து 30 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130930115237/http://www.hindustantimes.com/News-Feed/India/Indian-NGO-wins-accolades/Article1-636642.aspx. பார்த்த நாள்: 15 January 2012. 
  5. "Triveni Acharya, Civil Courage Prize Honoree 2011". Civil Courage Prize. 2011. Archived from the original on 28 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 15 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "A woman-friendly step, says Sonia". தி இந்து. 9 March 2008 இம் மூலத்தில் இருந்து 13 மார்ச் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080313213529/http://www.hindu.com/2008/03/09/stories/2008030958490800.htm. பார்த்த நாள்: 15 January 2012. 
  7. Flora Wang (9 November 2010). "Rescue Foundation wins this year’s rights award". Taipei Times. http://www.taipeitimes.com/News/taiwan/archives/2010/11/09/2003488095. பார்த்த நாள்: 15 January 2012. 
  8. "About the Prize". Civil Courage Prize. 2012. Archived from the original on 19 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 15 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "2011 Civil Courage Prize Honoree". civilcourageprize.org. October 2011. Archived from the original on 31 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 4 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "2013 Humanitarian Honoree World of Children Award". worldofchildren.org. September 2013. பார்க்கப்பட்ட நாள் 24 September 2013.
  11. "World of Children Award Cash Grant Awards". worldofchildren.org. பார்க்கப்பட்ட நாள் 24 September 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிவேணி_ஆச்சார்யா&oldid=3930859" இலிருந்து மீள்விக்கப்பட்டது