திரிவிக்கிரம கோயில்

ஆள்கூறுகள்: 18°19′10″N 76°8′30″E / 18.31944°N 76.14167°E / 18.31944; 76.14167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரிவிக்கிரம கோயில்
திரிவிக்கிரம கோயில் (முகப்பு)
திரிவிக்கிரம கோயில் is located in இந்தியா
திரிவிக்கிரம கோயில்
மகாராட்டிராவில் அமைவிடம்
திரிவிக்கிரம கோயில் is located in மகாராட்டிரம்
திரிவிக்கிரம கோயில்
திரிவிக்கிரம கோயில் (மகாராட்டிரம்)
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:மகாராட்டிரா
மாவட்டம்:உஸ்மானாபாத்
அமைவு:தேர், மகாராட்டிரம்
ஆள்கூறுகள்:18°19′10″N 76°8′30″E / 18.31944°N 76.14167°E / 18.31944; 76.14167
கோயில் தகவல்கள்

திரிவிக்கிரம கோயில் (Trivikrama Temple) என்றும் தேர் கோயில் அழைக்கப்படும் வாமனரின் கோயில், மகாராட்டிர மாநிலம் தேரில் அமைந்துள்ளது. இது விசுணுவின் அவதாரக் கோயிலாகும். ஹென்றி கூசன்சு மற்றும் இவரைத் தொடர்ந்து வந்த பெரும்பாலான எழுத்தாளர்கள், இதனை புத்த கோவில் என்று நம்பினர். இருப்பினும் 1957-ல் எம். எசு. மேட் இந்தக் கருத்தை மறுத்தார்.[1]

இந்த திருக்கோயில் அரைவட்ட வடிவுள்ள கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்த அமைப்பு இப்போது கோயில் கட்டிடத்தின் பின்புறத்தில் அமைந்துள்ளது. இத்தகைய அமைப்பு ஆரம்பக்கால பௌத்த சைத்தியம் வடிவமைப்புகளின் சிறப்பியல்பாக உள்ளது.[2] இது கிறித்துப் பிறப்பிற்கு 30 ஆண்டுகளுக்கு முன்னரும் பொது ஊழியில் 50 ஆண்டு தேதியிட்ட தக்கசீலாவின் சிர்காப்பில் காணப்படும் சமகால அமைப்பாகத் தெரிகிறது.[2] இது பொது ஊழியில் 2 அல்லது 3 ஆம் நூற்றாண்டில் சாதவாகனர்களின் ஆட்சியின்கீழ் கட்டப்பட்டிருக்கலாம்.[3]

வெளிப்புற தட்டையான கூரையுடன் கூடிய மண்டப அமைப்பு பொது ஊழியில் 6 ஆம் நூற்றாண்டில் கூடுதலாகக் கட்டப்பட்டதாக உள்ளது. இக்காலத்தில் இந்துக் கோயிலாக மாற்றப்பட்டது.[2] திரிவிக்கிரமன் கல் உருவம் அநேகமாக ஆரம்ப சாளுக்கியர் காலத்தினைச் சார்ந்ததாக இருக்கலாம்.[3]

கவியக் கோயிலின் முன்பு அலங்கரிக்கப்பட்ட சைத்திய-வளைவு ஒன்று பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. இது புத்த கட்டிடக்கலை அமைப்பில் நிறுவப்பட்டுள்ளது.[2]

சைத்திய பாணியில் கட்டப்பட்ட மற்றொரு இந்து கோவில், குண்டூர் மாவட்டத்தில் உள்ள செசர்லாவில் உள்ள பல்லவர் கால கபோதேஸ்வரர் கோவில் ஆகும். இந்த கோயிலின் கடவுளரான கபோதிசுவாரர், மகாபாரத சிபி கதையுடன் தொடர்புடையவர். இது தொடர்பான செய்தி சிபி ஜாதக கதைகளிலும் கூறப்பட்டுள்ளது.[4]

மகாராட்டிராவில் உள்ள பழமையான கட்டிடமாக திரிவிக்கிரம கோயில் கருதப்படுகிறது.[3]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. THE TRIVIKRAM TEMPLE AT TER, M. S. Mate, Bulletin of the Deccan College Post-Graduate and Research Institute, Vol. 18, TARAPOREWALA MEMORIAL VOLUME (January 1957), pp. 1-4
  2. 2.0 2.1 2.2 2.3 Le, Huu Phuoc (2010) (in en). Buddhist Architecture. Grafikol. பக். 237. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780984404308. https://books.google.com/books?id=9jb364g4BvoC&pg=PA237. 
  3. 3.0 3.1 3.2 Michell, George (2013) (in en). Southern India: A Guide to Monuments Sites & Museums. Roli Books Private Limited. பக். 142. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788174369031. https://books.google.com/books?id=GdBbBAAAQBAJ&pg=PT142. 
  4. Ahir, D. C. (1992) (in en). Buddhism in South India. South Asia Books. பக். 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170303329. https://books.google.com/books?id=WH0EAAAAYAAJ. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிவிக்கிரம_கோயில்&oldid=3303555" இலிருந்து மீள்விக்கப்பட்டது