திரிப்ளாய்டைட்டு
| திரிப்ளாய்டைட்டு Triploidite | |
|---|---|
அமெரிக்காவின் பிராஞ்ச்வில் குவாரியிலிருந்து பெறப்பட்ட, ஆர வடிவச் சிவப்பு நிற திரிப்ளாய்டைட்டு. (7.0 x 4.8 x 2.6 செ.மீ) | |
| பொதுவானாவை | |
| வகை | பாசுப்பேட்டு கனிமம் |
| வேதி வாய்பாடு | (Mn,Fe)2PO4OH |
| இனங்காணல் | |
| நிறம் | செம்பழுப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள் கலந்த பழுப்பு; ஊடுருவும் ஒளியில் இளஞ்சிவப்பு முதல் வெளிர் பழுப்பு வரை.. |
| படிக இயல்பு | நீண்ட மற்றும் கீற்றுகள் கொண்ட பட்டகப் படிகங்கள்; இழைத்தன்மை கொண்டவை: தூண் வடிவம் முதல் கோள வடிவக் கட்டிகள் வரை. |
| படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
| பிளப்பு | {010}, தெளிவு; {120}, சுமார்; on {110}, மிகக் குறைவு. |
| முறிவு | சமமற்றது முதல் சங்குருவம் வரை |
| மோவின் அளவுகோல் வலிமை | 4 1⁄2 – 5 |
| மிளிர்வு | விடாப்பிடியானது0, பளபளப்பானது, கொழுபார்ந்தது |
| கீற்றுவண்ணம் | வெண்மை, அரைவெண்மை . |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும், ஒளிகசியும் |
| ஒப்படர்த்தி | 3.70 அளக்கப்பட்டது |
| ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (+) |
| ஒளிவிலகல் எண் | nα = 1.725 nβ = 1.726 nγ = 1.730 |
| இரட்டை ஒளிவிலகல் | δ = 0.005 |
| பலதிசை வண்ணப்படிகமை | பலவீனம் |
| நிறப்பிரிகை | r > மிகு வலிமை |
| கரைதிறன் | அமிலங்களில் கரையும். |
| மேற்கோள்கள் | [1][2][3] |
திரிப்ளாய்டைட்டு (Triploidite) என்பது (Mn,Fe)2PO4OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இது ஓர் அரிதான மாங்கனீசு இரும்பு பாசுப்பேட்டு கனிமம் ஆகும். ஒற்றைச்சரிவச்சுப் படிக அமைப்பில் திரிப்ளாய்டைட்டு படிகமாகிறது. பொதுவாக நீளமான மற்றும் வரிகளுடைய மெல்லிய பட்டகங்களாகக் காணப்படுகிறது. இவை தூண் போன்றோ அல்லது இழை போன்றோ இருக்கும். இதன் படிகங்கள் இளஞ்சிவப்பு முதல் மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது சிவப்பு-ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.[1]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் திரிப்ளாய்டைட்டு கனிமத்தை Tpd[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
முதன்முதலில் 1878 ஆம் ஆண்டில் கனெக்டிகட்டின் பேர்ஃபீல்டு மாகாணத்தில் உள்ள பிரான்ச்வில்லில் இருக்கும் பிரான்ச்வில் குவாரியில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. இந்த பெயர் திரிப்லைட்டுடனான அதன் ஒற்றுமையிலிருந்து பெறப்பட்டது.[2]
பொதுவாக கிராணைட்டு பெக்மாடைட்டு வகை தீப்பாறைகளில் உள்ள முதன்மை பாசுப்பேட்டு கனிமங்களின், வெப்பநீர் மாற்ற விளைபொருளாகக் காணப்படுகிறது. திரிப்லைட்டு, இலித்தியோபிலைட்டு, டிரைபைலைட்டு, இயோசுபோரைட்டு, திக்கின்சோணைட்டு மற்றும் உரோடோக்ரோசைட்டு ஆகிய கனிமங்களுடன் இணைந்து திரிப்ளாய்டைட்டு காணப்படுகிறது.[1][3]
இரும்புச் செறிந்த வோல்ஃபைட்டுடன் ஒரு திண்மக் கரைசல் தொடரை உருவாக்குகிறது.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 Handbook of Mineralogy
- 1 2 3 Mindat
- 1 2 3 Webmineral data
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
