திரிபு (இலக்கணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் சொல்லோடு சொல் இணையும் புணர்ச்சியில் சொற்களில் மாற்றம் உண்டாவதைத் திரிபு என வழங்குவர். இந்த மாற்றங்களைத் தொல்காப்பியம் மெய் பிறிதாதல், மிகுதல், குன்றல் என மூவகையாகப் பாகுபாடு செய்துகொள்கிறது. [1] நன்னூல் திரிதலை விகாரம் எனக் குறிப்பிடுகிறது. இதன் பாகுபாடுகளைத் தோன்றல், திரிதல், கெடுதல் எனக் குறிப்பிடுகிறது. [2]

 • மிகுதல் (தோன்றல்)
  • நிலாச்சோறு, பலாப்பழம்
 • திரிபு - குன்றல் (கெடுதல்)
  • மர(ம்) வேர்
 • மெய் பிறிதாதல் - திரிதல்
  • பால் சோறு = பாற்சோறு (நிலைமொழியில் திரிபு)
  • கண் நன்று = கண்ணன்று (வருமொழியில் திரிபு)
  • கள் நன்று = கண்ணன்று (இருமொழியிலும் நிரிபு

அடிக்குறிப்பு[தொகு]

 1. அவைதாம்,
  மெய் பிறிது ஆதல் மிகுதல் குன்றல் என்று
  இவ் என மொழிப திரியும் ஆறே. (தொல்காப்பியம் புணரியல் 7)
 2. தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம்
  மூன்று மொழிமூ விடத்து மாகும். (நன்னூல் 154)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிபு_(இலக்கணம்)&oldid=1257900" இலிருந்து மீள்விக்கப்பட்டது