திரிபுர சுந்தரி கோயில்
தோற்றம்
(திரிபுர சுந்தரி கோயில், திரிபுரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| திரிபுரசுந்தரி கோயில் | |
|---|---|
| அடிப்படைத் தகவல்கள் | |
| அமைவிடம் | உதய்ப்பூர், கோமதி மாவட்டம், திரிபுரா மாநிலம், இந்தியா |
| சமயம் | சாக்தம், இந்து சமயம் |
| மாநிலம் | திரிபுரா |
| மாவட்டம் | கோமதி மாவட்டம் |

திரிபுரசுந்தரி கோயில் (Tripura Sundari Temple) இந்து சமயத்தின் சாக்தம் பிரிவின் முக்கியத் தெய்வமான திரிபுரசுந்தரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். இக்கோயில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். இக்கோயில் இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் கோமதி மாவட்டத்தில் உள்ள உதய்ப்பூர் அருகே திரிபுராவின் தலைநகரான அகர்தலாவிற்கு தென்கிழக்கே 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இக்கோயிலை 1501ஆம் ஆண்டில் நிறுவியவர் திரிபுரா மகாராஜா தான்ய மாணிக்கியா ஆவார்.
புனரமைப்பு
[தொகு]இக்கோயிலின் புனரமைப்பு திருப்பணிகள் முடிவடைந்து, 22 செப்டம் 2025 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இக்கோயிலுக்குச் சென்று வழிபட்டார். [1]
விழாக்கள்
[தொகு]லலிதா ஜெயந்தி (மகர பௌர்ணமி), லலிதா பஞ்சமி, நவராத்திரி ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Details about the Temple
- Mata Bari Temple
- Tripura Sundari Temple
- shreetripurasundari Temple in Rajasthan
- "SATHGURU SRI SESHADRI SWAMIGAL BRINDAVANAM TRUST". seshadri.info. Retrieved 2014-01-25.
