திரிபுரனேனி கோபிசந்த்
திரிபுரனேனி கோபிசந்த் | |||||
---|---|---|---|---|---|
பிறப்பு | அங்கலூரு, கிருஷ்ணா மாவட்டம், இந்தியா | 8 செப்டம்பர் 1910||||
இறப்பு | 2 நவம்பர் 1962 | (அகவை 52)||||
தொழில் | புதின ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர், நாடக ஆசிரியர், ஆசிரியர், திரைப்பட இயக்குநர் | ||||
தேசியம் | இந்தியர் | ||||
குடியுரிமை | இந்தியா | ||||
கல்வி | சட்டம் | ||||
குறிப்பிடத்தக்க படைப்புகள் |
| ||||
துணைவர் | சகுந்தலா தேவி
| ||||
பிள்ளைகள் | திரிபுரனேனி பரிமளா, இரமேஷ் பாபு, இரஜனி, இராம்கோபால், நளினி, சாய் சந்த் |
திரிபுரனேனி கோபிசந்த் (Tripuraneni Gopichand ) (8 செப்டம்பர் 1910 - 2 நவம்பர் 1962) ஒரு தெலுங்கு சிறுகதை எழுத்தாளரும், புதின ஆசிரியரும், கட்டுரையாளரும், நாடக ஆசிரியரும், திரைப்பட இயக்குனரும், ஒரு தீவிர மனிதநேயவாதியும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்ட வீரர் எம்.என்.ராயின் தீவிர மனிதநேயத்தால் ஈர்க்கப்பட்ட கோபிசந்த், தீவிர ஜனநாயகக் கட்சியின் (இந்தியா) ஆந்திராவின் முதல் மாநில செயலாளரானார்.[1] இவரது இரண்டாவது புதினமான அசமர்துனி ஜீவயாத்ரா தெலுங்கு இலக்கியத்தின் முதல் உளவியல் புதினமாகும்.[2] 1963 ஆம் ஆண்டில் பண்டித பரமேஸ்வர சாஸ்திரி வேலுநாமா என்ற நூலுக்கு சாகித்திய அகாதமி விருது இவரது மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது. இது, இந்த விருதை வென்ற முதல் தெலுங்கு புதினமாகும்.[3][4] கோபிசந்தின் எழுத்து மனித விழுமியங்களையும் கருத்துக்களையும் வலியுறுத்துகிறது. பொருள்முதல்வாதம், பகுத்தறிவுவாதம், இருத்தலியல், யதார்த்தவாதம் மற்றும் மனிதநேயம் ஆகிய கருத்துகளும் உரையில் பயன்படுத்தப்பட்டன.
சுயசரிதை
[தொகு]கோபிசந்த் செப்டம்பர் 8, 1910 அன்று கிருஷ்ணா மாவட்டத்தில் அங்கலூரு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை திரிபுரனேனி இராமசாமி ஒரு புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதியும் நாடக எழுத்தாளருமாவார். இவர் தனது சிறுவயதில் தனது தந்தையின் நாத்திகக் கொள்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். சிறு வயதிலேயே கோபிசந்த் தனது தாயை இழந்தார். சென்னையில் சட்டம் பயின்றார். அவர் நீண்ட காலமாக தனது தந்தையின் செல்வாக்கின் கீழ் இருந்தார். இவர் முதலில் எழுதிய பெரும்பாலான புதினக்களில் மார்க்சிய உணர்வுகள் முழுமையாகத் இடம் பெற்றிருந்தது.
திரைப்படங்கள்
[தொகு]இவர், திரைத்துறையிலும் நுழைந்து சில படங்களுக்கு எழுத்தாளராக பணியாற்றினார். இயக்குனராகவும், ஒரு தயாரிப்பாளராகவும் ஒரு சில படங்களைத் தயாரித்தார். சில படங்களுக்கு பாடல் எழுதியும், சில படங்களை இயக்கியுள்ளார்.
கௌரவம்
[தொகு]இந்திய அரசு, இவரது நினைவாக ஒரு அஞ்சல் முத்திரையை இவரது 100 வது பிறந்தநாளில் வெளியிடப்பட்டது.[5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Scientific humanism". 3 November 2010.
- ↑ "DVNarasaRaju &TGopichand-Writers". Lamakaan. 2 November 2013. Archived from the original on 24 February 2014.
- ↑ "Sahitya Akademi.Awards.Telugu". Sahitya-akademi.gov.in. பார்க்கப்பட்ட நாள் 26 February 2014.
- ↑ "Asamardhuni Jeeva Yatra By Tripuraneni Gopichand". Scribd.com. Archived from the original on 2 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 26 February 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "tripuraneni gopichand stamp | Phila-Mirror". 8 September 2011. Archived from the original on 25 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 26 February 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Special Correspondent (11 September 2011). "'Literature is social documentation'". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 26 February 2014.