திரிசுணா வனவிலங்குகள் சரணாலயம்
திரிசுணா வனவிலங்குகள் சரணாலயம் (Trishna Wildlife Sanctuary) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் அமைந்துள்ளது [1]. தெற்கு திரிபுரா மாவட்டத்தில் 163.08 கிலோமீட்டர் அல்லது 62.97 சதுர மைல் பரப்பளவில் இக்காப்பகம் பரந்து விரிந்துள்ளது. துணைக் கோட்ட நகரமான பெலோனியாவிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், தலைநகரம் அகர்தலாவுடன் மாநில தேசிய நெடுஞ்சாலையால் இணைக்கப்பட்டும் இக்காப்பகம் எளிய போக்குவரத்து வசதியைப் பெற்றுள்ளது. மாநிலத்தின் தெற்குப் பகுதியிலிருந்து பெலோனியா வழியாகவும், வடக்குப் பகுதியிலிருந்து சோனாமுரா வழியாகவும் காப்பகத்தை அடைய முடியும். பல நீர்த்தேக்கங்கள், நீர்நிலைகள் மற்றும் புல் வெளிகள் ஆகியவற்றால் இச்சரணாலயம் ஆக்கப்பட்டுள்ளது. அரிதான தாவரங்கள் நிரம்பிய பழம்பெருங் காடுகள் திட்டுதிட்டாக சரணாலயம் முழுவதும் விரவிக் காணப்படுகின்றன. இந்தியக் காட்டெருதுகள் இச்சரணாலயத்தின் சிறப்பம்சமாகும். இதைத் தவிர பலவிதமான பறவைகள், மான்கள், கிபன் குரங்கினம், கருங்குரங்குகள், நெடுவால் கோழிகள், பலவகை ஊர்வன வகை விலங்குகள் போன்றவற்றை இங்கு காணலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Protected area network in India" (PDF). Ministry of Environment and Forests, Government of India. p. 28. Archived from the original (PDF) on 7 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 2 April 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
புற இணைப்புகள்
[தொகு]- Tripura பரணிடப்பட்டது 2018-12-07 at the வந்தவழி இயந்திரம்