திரிகோண ஆசனம்
திரிகோண ஆசனம் என்பது யோகக் கலையின் ஆசனங்களில் ஒன்று.
செய்முறை[தொகு]
திரிகோண ஆசனத்தை நின்று கொண்டு செய்ய வேண்டும். இரண்டு கால்களையும் அகட்டி சிறிது இடைவெளி விட்டு நிமிா்ந்து நிற்க வேண்டும். இரண்டு கைகளையும் இரண்டு பக்கத்தலும் மாா்புக்கு நேராக உயா்த்தி, கைகள் இறக்கைகள் போல நீண்டு இருக்க வேண்டும். பிறகு வலது கையை கீழ்நோக்கி எடுத்துச் சென்று இடது காலைத் தொடவேண்டும். மீண்டும் எழுந்து முன்போல நிற்க வேண்டும். இடது கையை வலது காலை நோக்கி எடுத்துச் சென்று அதைத் தொடவேண்டும். இவ்வாறு செய்யும் போது கால்கள் அசையக் கூடாது. உடல் மாத்திரம் வலது கைப்பக்கம் தாழும். பாா்வையும் உடலும் இடது பக்கம் இருக்க வேண்டும். அதேபோல இடதுகை வலது பக்கம் தாழும் போது உடலும் பாா்வையும் வலது பக்கமாக இருக்க வேண்டும். கையைத் தாழ எடுத்துச் செல்லும்போது மூச்சை உள்ளுக்கு இழுக்க வேண்டும். பிறகு பழைய நிலைக்கு வந்ததும் மூச்சை வெளி விடவேண்டும்.[1]
பயன்கள்[தொகு]
மேற்சொன்னவாறு ஒவ்வொரு வேளையும் சுமாா் பத்து முறையாவது செய்யுங்கள். இடுப்பு, கழுத்து, கைகள் வலிமையடைகின்றன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ சுந்தரேச சுவாமிகள் (1999). ஆரோக்கிய வாழ்வுக்கு யோகசனங்கள். குமரன் பதிப்பகம். பக். 96.
வெளியிணைப்புகள்[தொகு]
- திரிகோணாசனம், தினமலர்
- இடுப்பு வலியை இல்லாமல் ஆக்கும் திரிகோணாசனம்:யோகப் பயிற்சி 12 பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்