திராவிட பிரஞ்சு ஒப்பிலக்கண நூல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திராவிட மொழிகளுக்கும் மற்ற மொழிகளுக்குமான ஒப்பிலக்கண ஆய்வு 100 வருடங்களாகவே நடந்து வருகிறது. அதில் பிரஞ்சுக்காரர்கள் எழுதிய ஒப்பிலக்கண மட்டும் மொழிமாற்று நூல்கள் அதிகம் பிரபலமடையவில்லை. புதுவைத் தமிழர்களான தேசிகம் பிள்ளை மற்றும் செவாலியே மதனகல்யாணி போன்றவர்கள் தமிழ் மொழியிலிருந்து பிரஞ்சு மொழிக்கு நிறைய நூல்களை மொழிபெயர்த்துள்ளனர்.

பட்டியல்[தொகு]

எண் நூல் ஆசிரியர் (வருடம் கி.பி.)
1. தமிழ் பிரஞ்சு அகராதி முசே
2. பிரஞ்சு தமிழ் அகராதி துய்புய்
3. திராவிட மொழிகளின் இலக்கண அமைப்பு ழுய்ல் புளோக்(1946)
4. திருவள்ளுவர் வரலாறு, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம் பெ. அதாம்
5. ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு (பகுதி), தாடகை வதைப்படலம், அகலிகை சாபவிமோசன படலம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி ழுலியேன் வேன்சான்
6. பயனத்தினசரி (தமிழ்நாட்டைப் பற்றிய பயண நூல்) ல்ஃப்னோத் (1769)
7. தமிழ்நாட்டு விலங்குகளும் பறவைகளும் ஃப்சே (1783)
8. தமிழ்நாட்டின் சமயக்கோட்பாடாட்சி போர்ல் விமாந்த் (1904)
9. பிரெஞ்சிந்தியா பொருளாதார நிலை சார்ல் வலாந்தேன் (1906)
10. தமிழ்நாட்டின் பழக்க வழக்கங்கள் மோரிசு மேந்திரோன் (1907)
11. மரம், கல், நாகம் பற்றிய திராவிடர் கோட்பாடு ழி. புல்னுவா
12. பாமரர் வாழ்க்கையும் பாட்டும் ஆன்றி தெக்ளோ சே தேரே (1940)
13. கள்ளர் சமூக அமைப்பு லுய்துய்மோன் (1957)
14. பிரஞ்சு தமிழ் மருத்துவ உரையாடல் குழியேன் போல் (1904)
15. பத்துப்பாட்டு பிரான்சுவா குரோ
16. திருக்குறள், நாலடியார், ஆசாரக்கோவை, நான்மனிக்கடிகை, திரிகடுகம், அறநெறிச்சாரம் ஞானுதியாகு
17. - தேசிகம் பிள்ளை
18. - செவாலியே மதனகல்யாணி

மூலம்[தொகு]

  • தமிழர் நாடும் தனிப் பண்பாடும், புதுவை நந்திவர்மன், அர்ச்சுனா பதிப்பகம், சோலைமேடு தெரு, சென்னை - 94