உள்ளடக்கத்துக்குச் செல்

திராவிட இயக்க இதழ்கள் – ஒரு பார்வை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திராவிட இயக்க இதழ்கள் - ஒரு பார்வை
நூல் பெயர்:திராவிட இயக்க இதழ்கள் - ஒரு பார்வை
ஆசிரியர்(கள்):க. திருநாவுக்கரசு
வகை:வரலாறு
துறை:இதழியல்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:90
பதிப்பகர்:நக்கீரன் பதிப்பகம்,
6, இரண்டாவது அறக்கட்டளை இணைப்புச் சாலை
மந்தைவெளிப் பாக்கம்,
சென்னை 600 028
பதிப்பு:மு.பதிப்பு திசம்பர் 1998
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

திராவிட இயக்க இதழ்கள் - ஒரு பார்வை என்னும் நூலை திராவிட இயக்க ஆய்வாளரான க. திருநாவுக்கரசு எழுதியிருக்கிறார். இந்நூலில் உள்ள கட்டுரைகள் சங்கொலி இதழில் தொடராக வெளிவந்தவை. அக்கட்டுரைகளைத் தொகுத்து, திராவிட இயக்கத்தைச் சார்ந்த இளைஞர்களின் பயன் கருதி வெளியிடுவதாக இந்நூலின் வெளியீட்டு நோக்கம் பதிப்புரையில் எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது.[1]

பின்னணி[தொகு]

சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியத் துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், டாக்டர் மா. இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையம் ஆகிய மூன்று அமைப்புகளும் சில திராவிட இயக்க இதழ்களையும் இதழாளர்களையும் தேர்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் இரண்டு கருத்தரங்குகளை நடத்தினர்.[2]

அவற்றுள் முதல் கருத்தரங்கம் 1998 பிப்ரவரி 6, 7 ஆம் நாள்களிலும் [3] செப்டம்பர் 21, 22 ஆம் நாள்களிலும் நடைபெற்றது.[4] இவ்விரு கருத்தரங்குகளிலும் 26 கட்டுரையாளர்கள் தத்தமது கருத்துரைகளை வழங்கினர்.[2] அக்கட்டுரைகளைப் பற்றி சங்கொலியில் க. திருநாவுக்கரசு திறனாய்வுக் கட்டுரைகள் எழுதினார். அவற்றின் தொகுப்பே இந்நூல் ஆகும்.

உள்ளடக்கம்[தொகு]

  1. நுழையும் முன் . . .
  2. திராவிட இயக்க இதழ்களின் பட்டியல்
  3. முதல் கருத்தரங்கைப் பற்றிய திறனாய்வு
  4. இரண்டாவது கருத்தரங்கைப் பற்றிய திறனாய்வு

சான்றடைவு[தொகு]

  1. திருநாவுக்கரசு க, திராவிட இயக்க இதழ்கள் - ஒரு பார்வை, நக்கீரன் பதிப்பகம் சென்னை, மு.பதி. திசம்பர் 1998, பக்.3
  2. 2.0 2.1 திருநாவுக்கரசு க, திராவிட இயக்க இதழ்கள் - ஒரு பார்வை, நக்கீரன் பதிப்பகம் சென்னை, மு.பதி. திசம்பர் 1998, பக்.4
  3. திருநாவுக்கரசு க, திராவிட இயக்க இதழ்கள் - ஒரு பார்வை, நக்கீரன் பதிப்பகம் சென்னை, மு.பதி. திசம்பர் 1998, பக்.23
  4. திருநாவுக்கரசு க, திராவிட இயக்க இதழ்கள் - ஒரு பார்வை, நக்கீரன் பதிப்பகம் சென்னை, மு.பதி. திசம்பர் 1998, பக்.35