திராவிட-சப்பானிய மொழிக்குடும்ப கருதுகோள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திராவிட-சப்பானிய மொழிக்குடும்ப கருதுகோள் என்பது சப்பானிய மொழி திராவிட மொழிகளோடு, குறிப்பாக தமிழோடு உறவு கொண்டது என்று கூறும் கருதுகோள் ஆகும். இக்கருத்துகள் ஆரம்பத்தில் 1970 இல் "சுசுமு ஷீபா" (Susumu Shiba) என்பவராலும்[1] பின்னர் "அகீரா ஃபூஜிவாரா" (Akira Fujiwara) (1981), சுசுமு ஓனோ உட்பட்ட சில ஆய்வாளர்களாலும் முன்வைக்கப்பட்டது. [2]. இந்தக் கருதுகோள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று அல்ல. குறிப்பாக இந்தக் கருதுகோளை முன்வைத்த சுசுமு ஓனோவின் முறையியலில் தவறுகள் இருந்தாக விமர்சிக்கப்பட்டுள்ளது.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pulvers, Roger., Was the Japanese language influenced by Tamil? The war goes on
  2. Nihongo wa doko kara kita kaKōdansha, Tokyo