திரவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திரவியம்
பிறப்புதிரவியம் ராஜகுமாரன்
29 ஏப்ரல் 1990 (1990-04-29) (அகவை 31)
கோயம்புத்தூர், தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை
பணிதொலைக்காட்சி நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2018-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
ரித்து (2014-தற்போது வரை)

திரவியம் ராஜகுமாரன் (29 ஏப்ரல் 1990) என்பவர் தமிழ்நாட்டுத் தொலைக்காட்சி நடிகர் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

திரவியம் 1990 ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழ்நாட்டில் கோவையில் பிறந்தார். கோவையில் சி.எஸ்.ஐ பிஷப் அப்பசாமி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் 15 ஜூன் 2014 அன்று தனது பெண்பரான ருதுவை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு.

நடிப்புத் துறை[தொகு]

இவர் 2018 இல் விஜய் தொலைக்காட்சியில் ஈரமான ரோஜாவே[1] என்ற தொடரின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். இந்த தொடரில் வெற்றி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த தொடர் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. 2019 இல் விஜய் தொலைக்காட்ச்சி விருதுகளில் சிறந்த இளமையான ஜோடி என்ற விருது இவருக்கும் இவரின் ஜோடியான பவித்ராவுக்கு வழங்கப்பட்டது. இதே ஆண்டில் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை என்ற விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.

தொடர்கள்[தொகு]

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
2018–ஒளிபரப்பில் ஈரமான ரோஜாவே வெற்றி விஜய் தொலைக்காட்சி
2019 மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை போட்டியாளராக
என்கிட்டே மோதாதே 2 விருந்தினராக
2020 ஸ்பீட் கெட் செட் கோ

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் முடிவு
2019 விஜய் தொலைக்காட்சி விருதுகள் 2019 சிறந்த இளமையான ஜோடிகள் திரவியம் & பவித்ரா வெற்றி

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரவியம்&oldid=3146588" இருந்து மீள்விக்கப்பட்டது